Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை டூ சென்னை விமானம்.. பிரபல பெண் தொழில் அதிபருக்கு நடந்த சம்பவம்.. இளைஞர்கள் மீது போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் சென்னை மீனாம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்த போது விமானத்தில் 35 வயதாகும் பிரபல பெண் தொழில் அதிபர் வந்துள்ளார். அவரது இருக்கைக்கு, பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டார்களாம். அதனை கண்டித்த பெண் தொழிலதிபரை அந்த இளைஞர்கள் அசிங்கமாக திட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் சென்னைக்கு கடந்த 12ம் தேதி இரவு வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.. விமானத்தில் 35 வயது பெண் தொழில் அதிபர் ஒருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறார். பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள்,கூச்சல் போட்டு, சத்தமாக பேசிக்கொண்டு, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

What happened to the famous businesswoman on the Coimbatore to Chennai flight

தட்டிக்கேட்ட பெண் தொழில் அதிபர்

அதனை கண்ட பெண் தொழில் அதிபர் அந்த இளைஞர்களை கண்டித்ததுடன். அமைதியாக பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினாராம். மேலும் ஏன் இவ்வாறு கூச்சல் போட்டு, சக பயணிகளுக்கு இடையூறு செய்கிறீர்கள்? என தட்டிக்கேட்டதாக சொல்லப்படுகிறது.

திட்டினார்களாம்

இதனால் அந்த இளைஞர்கள், மோசமான வார்த்தைகளால் பெண் தொழில் அதிபரை திட்டியதுடன், அவரிடம் ரகளை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர், விமான பணிப் பெண்களிடம் புகார் அளித்தார். அவர்கள், அந்த வாலிபர்களிடம் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டு அசிங்கமாக பேசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

பெண் தொழிலதிபரை இடித்த இளைஞர்

இந்த நிலையில் விமானம் இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் நின்ற இடத்தில் இருந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு வருவதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் 'பிக்கப்' பேருந்தில் ஏறி வந்தனர். அப்போதும் பெண் தொழில் அதிபரை வாலிபர்களில் ஒருவர் முழங்கையால் இடித்தாராம்.

கோவையில் பள்ளி நடத்துகிறார்

இதையடுத்து பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் தொழில் அதிபரிடம் மோசமாக நடந்து கொண்ட 3 பயணிகள் யார்? என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பயணியின் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 வாலிபர்களின் டிக்கெட் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பிட்ட பெண் தொழில் அதிபரின் கணவர், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு துறையில் உயர் அதிகாரி என்றும், அந்த பெண் சென்னை மற்றும் கோவையில் பள்ளிக்கூடம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+