சென்னை நட்சத்திர ஓட்டல் குளியல் தொட்டியில் ஆடையில்லாமல் பெண் வக்கீல்.. என்ன நடந்தது.. வெளியான தகவல்
சென்னை: திருவண்ணாமலையைச் சேர்ந்த ரோஜா என்ற வக்கீல், சென்னை ஐகோர்ட்டில் சீனியர் வக்கீல் ஒருவரிடம் பயிற்சி பெற்று வந்தார். அவரோடு வக்கீல் யஸ்வந்த் பயிற்சி எடுத்து வந்தார். இவர்கள் இருவரும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். இருவரும் அப்போது மது அருந்தியுள்ளனர்.. இதில் வக்கீல் ரோஜா இன்று உயிருடன் இல்லை.. அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த 32 வயதாகும் ரோஜா என்பர் சட்டப்படிப்பு படித்து முடித்து வக்கீலாக பணியாற்றுகிறார்கள் சென்னை ஐகோர்ட்டில் சீனியர் வக்கீல் ஒருவரிடம் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்தார். அவரோடு 33 வயதாகும் வக்கீல் யஸ்வந்த் என்பவரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாராம். இவர்கள் இருவரும் அன்பாக பழகி வந்துள்ளார்கள்.. கடந்த 15-ந்தேதியன்று இரவு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளார்கள். அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

ரோஜா தனியாக இருந்தார்
மது அருந்திய பின்னர் யஸ்வந்த், மதுபோதையில் இருந்த ரோஜாவை மட்டும் அறையில் தங்க வைத்துவிட்டு, தனது வீட்டிற்கு அவர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பிப்ரவரி 16-ந்தேதியன்று காலையில் யஸ்வந்த், ரோஜாவை செல்போனில் தொடர்பு கொண்டதாக சொல்லப்படுகிறது.. அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் ஆகியிருந்தது.
குளியல் தொட்டி
ரோஜா கழிவறையில் உள்ள குளியல் தொட்டி தண்ணீருக்குள் ஆடைகள் இல்லாத நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உடனடியாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வக்கீல் ரோஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரோஜாவின் செல்போன் சுவிட்ச்-ஆப்
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் சந்தேக மரணம் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்திருக்கிறார்கள். யஸ்வந்திடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தான் வெளியில் போகும்போது ரோஜா நன்றாக இருந்தார்.. அதன்பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது. இரவில் வீட்டிற்கு சென்ற பிறகு ரோஜாவுடன் செல்போனில் பேசியிருக்கிறார். காலையில்தான் ரோஜாவின் செல்போன் சுவிட்ச்-ஆப் ஆனது.
இறந்தது எப்படி?
நேற்று வக்கீல் ரோஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது தந்தையிடம் போலீசார் ஒப்படைத்துவிட்டார்கள். பிரேத பரிசோதனையில் வக்கீல் ரோஜா கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகளும் காணப்படவில்லை என்றும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவர் இரவு குளிப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம் என்றும், அப்போது ஏதோ விபரீதம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கருதுவதாக போலீசார் கூறினார்கள். தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் கூறினார்கள். முழு விசாரணைக்கு பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்












Click it and Unblock the Notifications