Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை புழலில் ஒரு குடும்பத்திற்கே எமனாக மாறிய ஜெனரேட்டர் புகை.. மறந்தும் இந்த தப்பு பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இவர் தனது இரண்டு மகன்களுடன் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் செல்வராஜ், வீட்டில் இருந்த ஜெனரேட்டரை இயக்கி உள்ளார். அதில் வந்த புகை குடும்பத்திற்கே எமனாகி உள்ளது.

வீட்டில் ஜெனரேட்டர் வைக்கும் போது திறந்த வெளியில் தான் ஜெனரேட்டரை வைக்க வேண்டும். அதன்புகை வீட்டின் அறைக்குள் வரும்படி இருக்கவே கூடாது. ஏனெனில் பெட்ரோல் மூலம் இயங்கும் ஜெனரேட்டரை வீட்டிற்குள் அல்லது ஒரு சிறிய அறையில் இயக்குவது மிகவும் ஆபத்தானது.

What Happened to the Selvaraj Family After Inhaling Generator Smoke Near Puzhal Chennai

என்ன நடக்கும்

ஜன்னல்கள் மூடப்பட்டு ஏர் கண்டிஷனரை இயக்கினால் கூட பெட்ரோல் ஜெனரேட்டர்கள் கார்பன் மோனாக்சைடை (CO) உற்பத்தி செய்கின்றன, இது நிறமற்ற, மணமற்ற வாயு என்பதால் சுவாசிப்போருக்கு எமனாகிவிடும். தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்பட்டு உயிரிழப்பிற்கு காரணமாகிவிடும். தூக்கத்தில் இருப்போருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோவார்கள் அப்படி ஒரு சம்பவம் தான் புழலில் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் சென்னையில் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இதற்காக சென்னையிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பிரிட்டானியா நகர் 10-வது தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் மாலா(50). இவர்களுக்கு ஒரு மகள் இதயா(16). இரண்டு மகன்கள் சுமன்ராஜ்(15), கோகுல்ராஜ்(13) இருந்தனர்.

படுக்கை அறை

இதில் சுமன்ராஜ் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய இருவரும் புழல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டுள்ளார்கள். பின்னர் மாலா, தனது மகள் இதயாவுடன் ஒரு அறையிலும், செல்வராஜ் தனது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோருடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கியிருக்கிறார்கள்.


கதவை தட்டிய மாலா

நேற்று காலையில் எழுந்த மாலா, டீ போட்டுவிட்டு கணவர் மற்றும் மகன்களை எழுப்ப சென்றுள்ளார்,. நீண்ட நேரம் தட்டியும் அவர்கள் அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அங்கு செல்வராஜ் மற்றும் அவரது 2 மகன்களும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனே போலீசுக்கு தகவல் தந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகை நெடி

3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என முதலில் போலீசார் கருதினர். ஆனால் அவர்கள் விஷம் குடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதால் , தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இறந்து கிடந்த அறையில் ஜெனரேட்டர் புகை நெடி அடித்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் செல்வராஜ், வீட்டில் இருந்த ஜெனரேட்டரை இயக்கி இருக்கிறார். அதில் இருந்து வெளியேறிய புகை தந்தை மற்றும் மகன்கள் படுத்து இருந்த அறைக்குள் பரவி உள்ளது. இதனால் 3 பேரும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ஜெனரேட்டர் புகை

செல்வராஜின் மனைவி, மகள் இருவரும் மற்றொரு அறையில் தூங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே 3 பேரின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் ஜெனரேட்டர் புகை காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+