Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. பூமி ரிவர்சில் சுற்றினால் என்னென்ன நடக்கும்? விஞ்ஞானிகள் சொல்லும் விளக்கத்தை கேளுங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது பூமி தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. தன்னை தானே சுற்றும் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுகிறது. ஒருவேளை இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றினால் என்ன ஆகும் தெரியுமா? இதற்கான விடையை விஞ்ஞானிகள் கொடுத்திருக்கிறார்கள்.

நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த பூமி மிகவும் தனித்துவமான ஒன்று. மிகச்சரியாக சொல்வதெனில் பூமி ஒரு அதிசயம் என்று சொல்லாம். ஏனெனில் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் பூமியை தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது. நாமும் நமக்கு தெரிந்த திசைகளெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எங்கும் உயிரினங்களை கண்டுபிடிக்கவில்லை.

அந்த வகையில் நாமும், நாம் பார்க்கும் அனைத்து உயிரினங்களும், இந்த உயிரினங்களை உள்ளடக்கிய இந்த பூமியும் அதிசயமானதுதான். இந்த அதிசயத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. அதில் முதன்மையானது பூமியின் சுழற்சி. முந்தைய காலங்களில் பூமிதான் மையம் என்றும், நம்மை சுற்றிதான் சூரியன் உள்ளிட்ட கோள்கள் வலம் வருகிறது எனவும் நம்பிக்கொண்டிருந்தோம்.

What happens if the earth rotates towards the east and suddenly rotates towards the west? Here is the scientists explanation

ஆனால் வானியல் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகள் இந்த கூற்றை உடைத்து பூமிதான் சூரியனை சுற்றி வருகிறது என்றும், பூமி தன்னை தானே சுற்றுவதால்தான் இரவு பகல் உருவாகிறது எனவும் கண்டுபிடித்தோம்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். இந்த சுழற்சியால் பூமிக்கு என்ன பயன்? இருக்கு பயன் இருக்கு. முதல் பயன் சூரிய ஒளியின் தாக்குதலிலிருந்து தப்பிப்பது. சூரிய ஒளி எனில், ஒளி மட்டும் கிடையாது, அத்துடன் புற ஊதாக்கதிர்கள் ஆகியவையும் சேர்ந்து வரும். இந்த கதிர்கள் நமக்கு ஆகாது. இப்படி இருக்கையில் பூமி சுற்றுவதால் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு என பூமியில் வெப்பமும், குளிரும் சமநிலையில் மெயின்டன் ஆகிறது.

அதேபோல பூமியின் காலநிலை, பருவ மழை, கடல் நீரோட்டம் எல்லாமே இந்த சுழற்சியை மையப்படுத்ததான் இருக்கிறது. எனவே பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றினால் கடல் நீரோட்டம் தலைகீழாக மாறும். கடல் நீரோட்டம் என்பது ஒவ்வொரு கண்டத்தின் வெப்பநிலையை நிர்ணயம் செய்கிறது. எனவே பூமி ரிவர்சில் சுற்றினால், அட்லாண்டிக் கடலில் நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் பசிபிக் கடலில் நடக்கும் என்று ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது ஆப்பிரிக்காவின் மழை காடுகள் முழுவதும் பாலைவனமாக மாறும். அதேபோல அதிக பனிப்பொழிவு இருக்கும் ரஷ்யா இந்தியாவை போல வெப்பமண்டல காடுகளாக மாறும். எனவே அங்கு அதிக அளவில் காடுகள் உருவாகும்.

மற்றொரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுழல வேண்டும் எனில் முதலில் பூமியின் சுழற்சி நிற்க வேண்டும். சுழற்சி நின்றால்தான் ரிவர்சில் சுழல தொடங்கும். பூமி தொடர்ந்து சுழல்வதால்தான் பூமியில் காந்த புலம் உருவாகிறது. காந்த புலம்தான் சூரியனிலிருந்து வெளி வரும் புற ஊதாக்கதிர்களை தடுக்கிறது. அப்படி இருக்கையில் பூமி நின்றுவிட்டால் இந்த காந்த புலங்கள் இருக்காது.

இப்படி காந்த புலம் இல்லையெனில் உயிர்கள் அழிய தொடங்கிவிடும். அப்படியே மீண்டும் ரிவர்சில் பூமி சுற்ற தொடங்கிவிட்டு காந்த புலம் மீண்டும் வந்துவிட்டால், கடலில் உள்ள பைட்டோ பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து, சைனோ பாக்டீரியாவின் எண்ணிக்கை அதிகரித்து விடும். பூமியின் பெரும்பாலான ஆக்சிஸன் தேவையை அமேசான் காடுகள் நிறைவேற்றுவதில்லை. இந்த பைட்டோ பாக்டீரியாதான் நிறைவேற்றுகிறது. ஆனால் இந்த சைனோ பாக்டீரியா மேலும் தூய்மையான ஆக்ஸிஜனை உருவாக்கும். தூய்மையான ஆக்சிஜன் மனிதனின் உயிரை கொல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+