சிஎஸ்கே "கில்லி" தான்! ஆனாலும் இன்றைய போட்டியில் பெரிய பிரச்னை இருக்கு! ஹர்பஜன் சிங் சொல்வதை கேளுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணி இன்றைய குவலிபையர் போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளும் நிலையில், இன்றைய போட்டி குறித்து ஹர்பஜன் சிங் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் ப்ளேஆப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் குவாலிபையர் மற்றும் எலிமினெட்டர் போட்டி சென்னையில் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து 2ஆவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டி குஜராத்தில் மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிகளை எதிர்பார்த்து ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

What Harbhajan Singh said about CSKs this year performance at the Chepauk

குவாலிபையர்: இன்றைய தினம் நடக்கும் முதலாம் குவாலிபையர் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் வெல்லும் அணி நேரடியாக பைனல் செல்லும் என்பதால் இதில் வெல்லவே இரு அணிகளும் முனைப்புக் காட்டும். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை இதுவரை சிஎஸ்கே அணி வீழ்த்தியதே இல்லை என்பதால் இந்தப் போட்டி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதேநேரம் குஜராத் சிஎஸ்கேவை எதிர்த்து ஆடிய அனைத்து போட்டிகளும் வேறு மைதானங்களில் தான் நடந்துள்ளன. இதுவரை குஜராத் அணி சென்னை சேப்பாக்கத்தில் விளையாடியதே இல்லை. சிங்கத்தை அதன் குகையில் சென்று எதிர்கொள்வதைப் போல மஞ்சள் படையின் ஆதரவுடன் இறங்கும் தல தோனியின் சிஎஸ்கேவை இன்று குஜராத் எதிர்கொள்ளப் போகிறது.

ஹர்பஜன் சிங்: எப்போது சிஎஸ்கே அணி தனது சொந்த மண்ணில் கில்லியாகவே இருந்துள்ளது. இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக இருந்துள்ளது. இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிஎஸ்கேவுக்காக விளையாடியவருமான ஹர்பஜன் சிங் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது இந்த ஆண்டு சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு சிஎஸ்கே அணி சிதம்பரம் மைதானத்தில் விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று தோல்வியடைந்துள்ளது.

இந்தாண்டு ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளை சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளன. இதில் கொல்கத்தா போட்டியை தவிரப் பஞ்சாப், ராஜஸ்தான் போட்டிகள் கடைசி வரை சென்ற போதிலும், சென்னை அணியால் அதை வெற்றிகளுமாக முடிக்க முடியவில்லை.

என்ன சொன்னார்: இது குறித்து ஹர்பஜன் சிங் மேலும் கூறுகையில், "சென்னை, குஜராத் போட்டி கடுமையாக இருக்கும்.. இரு அணிகளுக்கும் முக்கிய ஆட்டங்களில் எப்படி விளையாட வேண்டும் எனத் தெரியும். சிஎஸ்கே அதன் சொந்த மைதானத்தில் விளையாடுவது பெரிய பலம்.. இங்கே இருக்கும் சூழல் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும்.

What Harbhajan Singh said about CSKs this year performance at the Chepauk

அதேநேரம் கடந்த ஆண்டுகளைப் போல சிஎஸ்கே சொந்த மைதானத்தில் பக்காவாக இருந்தது என சொல்ல முடியாது. இது இன்றைய போட்டியை சுவாரஸ்யமாக்குகிறது. ஆனால் சென்னை பிளேஆஃப்களில் விளையாடும்போது எப்போதும் முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும். எனவே, இந்த போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை" என்று அவர் பிரபல ஆங்கில ஸ்போட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

இன்று நடக்கும் முக்கிய போட்டியில் சென்னை அணியில் கான்வே மற்றும் கெய்க்வாட் பங்களிப்பு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை இருவரும் மிக சிறப்பான ஒரு தொடரை வெளிப்படுத்தி உள்ளதாகவும் இந்தப் போட்டியிலும் அவர்கள் அதேபோல விளையாடுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு அணிக்குத் தொடக்க வீரர்கள் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும் வகையிலேயே இவர்கள் ஆட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+