Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை நடைபயணம்.. தொடங்கிய பாஜக ஆட்டம்.. எடப்பாடிக்கு ஏற்பட போகும் சிக்கல்கள்.. ரவீந்திரன் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையின் நடைபயணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போகாதது ஏன் என்பது குறித்து பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி பதில் அளித்தார். அப்போது எடப்பாடியை பாஜக பார்க்கிறது என்பது பற்றியும் அதிமுகவின் ஓட்டு வங்கி எவ்வளவு என்பது குறித்தும் விமர்சனம் செய்தார்.

பத்திரிக்கையாளர் ரவீந்தரன் துரைசாமி ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அண்ணாமலையின் நடைபயணம், எடப்பாடி பழனிசாமியின் வியூகம், 2024ல் தேர்தல் எப்படி இருக்கும், அண்ணாமலை எப்படி செயல்படுவார் என்பது குறித்து பேசினார்.

What impact will BJPs Annamalai walk have on AIADMKs Edappadi Palaniswami? Raveendren Duraisamy reply

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பத்திரிக்கையாளர் ரவீந்தரன் துரைசாமி பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இப்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆதரவு vs மோடி எதிர்ப்பு என்று தான் இருக்கும்.

2014 மற்றும் 2019 இல் மோடி எதிர்ப்பு இங்கு பெரியதாக இருந்தது. ஆனால் 2024ல் மோடி ஆதரவு இங்கு ஓரளவு வளர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை.. 2014ல் லேடியா மோடியா என்று ஜெயலலிதா கேட்டாங்க.. 2019ல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்துக்கு ஈர்ப்பு இல்லை.. 2019ல் மோடியை மையமாக வைத்து களம் ஆடினார்கள்.

2024ல் மோடியா அல்லது ஆன்டி மோடியா என்று போட்டியில் மோடி ஆதரவு வட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்றால் மிகவும் கீழே போய்விடுவார் என்று நாம் சொன்னோம். இதை அவரை சுற்றியுள்ள ஆதரவாளர்கள் ஏற்க மறுத்தாலும் அவர் ஏற்றுக்கொண்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடி கலந்து கொண்டார்.

அண்ணாமலை என்ன நினைக்கிறார் என்றால், 2014ஐ விட 2019ல் பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ந்துள்ளது. 18 சீட்டை பெற்று 38 சதவீதம் வரை ஓட்டினை பெற்றுள்ளார்கள். ஒடிசாவில் ஒரு சீட்டில் இருந்து 8 சீட்டாக உயர்ந்தது. 40 சதவீதம் ஓட்டு வந்தது. இப்போது தமிழகத்தில் மோடி தலைமையிலான கூட்டணி தான் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க முடியும், ஏனெனில் எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குகளை ஈர்க்ககூடிய நபர் மட்டும்தான். ஓ பன்னீர்செல்வம் அதே வகை தான். ராமதாசும் வாக்குகளை ஈர்க்கக்கூடிய நபர் தான்.

எனவே எடப்பாடி பழனிசாமி இங்கு வாக்குகளை ஈர்க்கக்கூடிய நபர்களில் ஒருவர் தானே தவிர. தனித்துவமான பெரிய அரசியல் சக்தி அல்ல. இதை அறிந்து கொண்ட மோடி அமித்ஷா அண்ணாமலை டீம் இங்க பாஜகவை பலப்படுத்துவதற்கு கூட்டணியில் அதிக சீட் நிற்பதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. அதற்கான வேலையில் தான் மீண்டும் மோடி மீண்டும் மோடி என்ற யாத்திரையை அண்ணாமலை தொடங்கி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத வாக்குகளை வாங்கி நான் வலிமையானவன் என்பதை ஏற்கனவே அண்ணாமலை நிரூபித்துள்ளார். பாஜக இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டில் நிற்க வேண்டும் என்பதற்காகவும் பாஜக இங்கு பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காகவும் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

What impact will BJPs Annamalai walk have on AIADMKs Edappadi Palaniswami? Raveendren Duraisamy reply

2014ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவிற்கு 45 சதவீதம் ஓட்டு கிடைத்தது. ஆனால் 2019ல் வெறும் 15 சதவீதம் ஓட்டுக்களை தான் இபிஎஸ் ஓபிஎஸ் அணியால் பிரதமர் மோடிக்கு வாங்கி தர முடிந்தது. கிட்டத்தட்ட இதில் 17 சதவீதம் ஓட்டு ஸ்டாலின் ராகுல் அணிக்கு போய்விட்டது.. அடுத்ததாக 13 சதவீதம் ஓட்டு வந்து கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் ஆகியோருக்கு சேர்ந்து போய்விட்டது. இதில் சீமான் நிலையான உறுதிப்பாட்டுடன் இருக்கிறார்.. ராகுலும் வேண்டாம், மோடியும் வேண்டாம் என்று தனித்து நிற்கிறார். ஒபிஎஸ் இபிஎஸ் சேர்ந்தே 15 சதவீதம் ஓட்டுதான் வாங்கித்தர முடிந்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் பக்கத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டது அவருக்கு பெரிய பிளஸ்தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு மிகவும் முக்கியமா என்பது போகப்போகத்தான் தெரியும். 2019 தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குகளை கூட்டணிக்கு மாற்றக்கூடிய சக்தி குறைவாக உள்ளது என்பது பாஜகவிற்கு தெள்ளத்தெளிவாகவே தெரியும்.

இரண்டாவது முறை பாஜக கூட்டணிக்கு வந்திருக்கிறார். 330 சீட் ஜெயிக்கும் என்று சொல்லி இருக்கிறார். அப்படி சொன்ன அடுத்த நாளே ரவீந்திரநாத்தை கலந்து கொள்ளுமாறு பிரகலாத் ஜோஷி (அமைச்சர்) அழைத்திருந்தார். அவரும் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார். அதுபற்றி எனக்கு தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். பாஜகவின் கணக்கிற்கு ஓ பன்னீர்செல்வமும் இருக்கிறார் என்பது தெரிகிறது-

ஆனால் பன்னீரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைத்தால் கோபித்துக்கொள்வார் என்பதால் அவரை அழைக்கவில்லை என்பதை ஏற்கிறேன். அதேநேரம் எடப்பாடி பழனிசாமி பாஜகவை பொறுத்தவரை ஓட்டுக்களை வாங்கக்கூடியவர் மட்டுமே.. அதேபோல் தேமுதிகவையும் பார்க்கிறார்கள். பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் வைத்து பாஜக கண்டிப்பாக பின்னாளில் பவர் அரசியல் செய்யும்.

What impact will BJPs Annamalai walk have on AIADMKs Edappadi Palaniswami? Raveendren Duraisamy reply

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பாமக டிடிவி தினகரன் அணியுடன் சேரக்கக்கூடாது என்று நினைத்து அதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7+1 கொடுத்து செயல்பட்டவர். இந்நிலையில் ராமதாஸ் பிறந்த நாளுக்கு காலையிலேயே வாழ்த்து தெரிவிக்காமல், ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்த ஒரு மணி நேரத்திற்கு பின்னரே பிற்பகலில் எடப்பாடி வாழ்த்து தெரிவித்தார். இதற்கு காரணம் ஓபிஎஸ் உடன் ராமதாஸ் சேர்ந்துவிடக்கூடாது என்பது தான். பன்னீருடன் சேரக்கூடாது என்பதற்காக வேகமாக எடப்பாடி செயல்படுகிறார். ஆனால் நாளை பாஜக பன்னீரை கூட்டணியில் சேர்க்க விரும்பும். அதற்கு எந்த அளவிற்கு எடப்பாடி இறங்கி வருவார் என்பதை பார்ப்போம்" இவ்வாறு கூறினார்.

அண்ணாமலையின் யாத்திரை கூட்டத்திற்கு அமித்ஷா வந்துள்ளார். ஆனால் ஏன் எடப்பாடி போகவில்லை? ஆர்பி உதயகுமாரைத்தான் அனுப்பி வைத்தார் இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று நெறியாளர் கேட்டார்.. இதற்கு பதில் அளித்த ரவீந்திரன், "அவரை பொறுத்தவரை அதிமுகவை நம்பித்தான் பாஜக என்று நினைக்கிறார் என்பதை ஏற்கிறேன். இதுவரை எந்த பேரத்திலும் எடப்பாடி விழவில்லை. 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்து வெறும் 23 சீட்டில் பாமகவை நிறுத்திவிட்டார். இதேபோல் காங்கிரஸ் பிடிக்குள் திமுக வந்துவிடக்கூடாது என்பதற்காக 20 சீட்டில் பாஜக நிறுத்திவிட்டார்.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.. மோடி பிரதமர் என்ற புள்ளிக்குள் வந்து சரண்டர் ஆகிவிட்டீர்கள்(எடப்பாடி), ஜாதிய முரண்பாட்டை நீக்க பாஜக தேவை என்பதை ஏற்றுக்கொண்டீர்கள்.. சீட்டை பிரிப்பதுதான் இனி நடக்க போவது. இதில் கொஞசம் கடுமையான ஆள் தான் எடப்பாடி பழனிசாமி. இதனை நான் மறுக்கவில்லை. ஆனால் அண்ணாமலை தமிழிசை போல் அமைதியாக கடந்து செல்பவர் அல்ல.. சீட் பயணத்தை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு தான் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார். மோடி பிரதமர் என்ற புள்ளியில் தான் இந்த அணி மேலே வரமுடியும் என்பது தான் என் கருத்து என்று ரவீந்திரன் கூறினார்.

அப்போது பேசிய நெறியாளர், "ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள வந்த போது முதல்வர் ஸ்டாலின் தான் தொடங்கி வைத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி போகவில்லை. இத்தனைக்கும் அண்ணாமலை முறைப்படி அழைப்பு விடுத்தார் ஆனால் ஆர்பி உதயகுமாரைத்தான் அனுப்பி வைத்தார்.. அவரை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு கீழ் தான் பாஜக என்று தானே நினைப்பார். கடந்த முறை கொடுத்த சீட் தானே கொடுப்பார் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த ரவீந்திரன் "அப்படி நடந்தால் கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளது. தமிழிசை மாதிரி அண்ணாமலை இருக்கமாட்டார். அந்த புள்ளிக்குள் தெளிவாக இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம், ராமதாஸை சேர்த்துக்கொண்டு எடப்பாடியை தனித்துவிட்டால் பயந்துவிடுவார். ஜெயலலிதா கருணாநிதி போல் தனித்துவமான அரசியல்வாதியாக பாஜக பார்க்கவில்லை. இவரை ஒரு வாக்குகளை கவரக்கூடிய நபராக மட்டும் பார்க்கிறது"இவ்வாறு ரவீந்திரன் துரைசாமி கூறினார். முழு தகவல்களை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+