அண்ணாமலையின் ‘ப்ளே’? ஆல் இன் ஆல் டெல்லியின் பிளான்.. 'கூட்டணி சீக்ரெட்’ சொல்லும் அரசியல் விமர்சகர்!
அண்ணாமலை பேச்சு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
சென்னை : 2014ல் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தது மோடி எதிர்ப்பு வாக்குகள் அதிமுக - திமுக என பிரிந்ததால் தான். அதை கணக்கில் வைத்தே பாஜக தனித்துக் களமிறங்க முடிவு செய்கிறது என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக விவாதிக்கப்படும் விவகாரம் அண்ணாமலை, அதிமுக கூட்டணி வேண்டாம் எனப் பேசியிருப்பதுதான். பாஜக சீனியர்களே அண்ணாமலையின் இந்தக் கருத்தை ஏற்க மறுத்துள்ளனர்.
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பிரதமர் மோடியிடமும் வலியுறுத்த இருக்கிறாராம் அண்ணாமலை. இந்நிலையில், பாஜகவின் 2024 தேர்தல் பிளான் என்ன என்பது பற்றி நம்முடன் பேசியுள்ளார் ரவீந்திரன் துரைசாமி.

அலெர்ட் அண்ணாமலை
ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களிடம் மிக மிக எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் காலை வாரிவிடுவார். அவர் முந்துவதற்கு முன்பு நாங்கள் பவர்ஃபுல்லாகவே இருக்கிறோம், உள்ளாட்சி தேர்தலிலேயே தனியாக நின்று 5 சதவீத வாக்குகளை எடுத்துவிட்டோம். தமிழிசை காலத்தைப் போல, பாஜக தோற்கும் இடங்களாகப் பார்த்து கொடுத்துவிட்டால் எனன் செய்வது? அதனால், அண்ணாமலை அலர்ட்டாக இருப்பது சரியானதுதான். அண்ணாமலை டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களைச் சந்தித்து தனது முடிவைச் சொல்லும்போது, தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டையும் சொல்வார்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.

தோற்பதை பற்றி கவலை இல்லை
மேலும், கோவை எம்.பி தொகுதியில் நின்று ஜெயிப்பதற்காகவே அண்ணாமலை இவ்வளவு 'ப்ளே' செய்கிறார் என்று அண்ணாமலை மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், அப்படி இல்லை, கட்சி வளர்ச்சிக்குத்தான் நான் மாநில தலைவராக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை. நேரடி மோதலில் பாஜக தோற்றிருக்கிறது. பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியும்போதுதான் மூன்று சீட்களாவது பாஜகவுக்கு கிடைத்திருக்கின்றன. எது பாஜகவுக்கு சாதகமோ அந்த நிலையை நோக்கி நகர்கின்றனர். தமிழ்நாட்டை நம்பி ஒன்றும் பாஜக 2014, 2019ல் ஆட்சிக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் பாஜக தாங்கள் தோற்கும் சீட்களைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களின் குறி வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகள் மட்டும்தான்.

தலைமையே பவர் கொடுத்திருக்கலாம்
2014ல் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தது மோடி எதிர்ப்பு வாக்குகள் அதிமுக - திமுக என பிரிந்ததால் தான். அதை கணக்கில் வைத்தே பாஜக தனித்துக் களமிறங்க முடிவு செய்கிறது. எடப்பாடி பழனிசாமியை நம்பிச் சென்றால் கடைசி நேரத்தில் அவர் ஏமாற்றிவிடுவார் என்ற புள்ளியில் அண்ணாமலைக்கு இவ்வளவு பவரையும் கொடுத்துவிட்டதே பாஜக தலைமையாகக் கூட இருக்கலாம். ஜெயலலிதா செய்த அரசியல், எடப்பாடி பழனிசாமியின் கடந்த கால செயல்பாடுகளைப் பார்த்து, அலெர்ட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை ஒன்று சொல்லட்டும், வானதி, நயினார் நாகேந்திரன் ஒன்று சொல்லட்டும், கடைசியாக பார்த்துக் கொள்ளலாம் என்று கூட டெல்லி தலைமை திட்டமிட்டிருக்கலாம் என்கிறார் ரவீந்திரன் துரைசாமி.

எடப்பாடியை முந்தும் சீமான்
திமுக + காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையினர் வாக்குகளை அதிகம் பெறும். பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைப்பது கேள்விக்குறிதான். சீமான் அந்த இடத்தில் தன்னை நிரூபித்து சிறுபான்மையினரிடம் ஆதரவு பெறுகிறார். சமூக வலைதளங்களின் மூலம் ஒவ்வொரு சமூகத்தவரும் இன்று இத்தனை விழிப்புணர்வோடு இருக்கும்போது, யார் யார் சமூகத்தவர் வாக்குகளை குறிவைத்து செயல்படுகிறார்கள், யார் உண்மையாக ஆதரிக்கிறார்கள் என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். சமூக நீதி சூறையாடல் என்ற அடிப்படையில் ஈபிஎஸ்ஸை பார்த்து, அனைத்து சமூகத்தவருக்கும் பொதுவானவர் என சீமானை பார்க்கின்றனர்.

அதிமுகவுக்கு கண்டிஷன் போட
தலைமை தான் முடிவெடுக்கும் என நயினார் நாகேந்திரன் சொல்வது ஒருபக்கம் என்றால், பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை சொல்வது அதிமுகவுக்கு இன்னொரு நெருக்கடிதான். பாஜக எடப்பாடி பழனிசாமியை நம்பி இருக்கிறது என்ற தோற்றம் இல்லாமல், அதிமுகவுக்கு கண்டிஷன் போட ஒரு தலைவர் இருக்கிறார் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் இது பயன்படும். எடப்பாடி பழனிசாமி 39 சீட்களிலும் தனித்து நிற்கும் முடிவை எடுக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கு பாஜகவை இப்போதே தயார் செய்கிறார் அண்ணாமலை எனக் கூறியுள்ளார் ரவீந்திரன் துரைசாமி.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications