தமிழகத்தில் தாமரையை மலர வைக்க.. சைக்கிள் ஏறி வருவாரா வாசன்.. மோடியுடன் சந்திப்பு ஏன்!
பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசியுள்ளார் ஜிகே வாசன்
Recommended Video
சென்னை: எப்பவும் இல்லாமல் தமிழக அரசியல் களம் படு சூடு பிடித்துள்ளது.. டெல்லியில் பிரதமர் மோடியை ஜிகே வாசன் சந்தித்துள்ளது பல கேள்விகளை எழுப்பிவருகிறது.
நடந்து முடிந்த எம்பி தேர்தலில் அதிமுக-பாஜகவுடன் தமாகாவும் கூட்டணி வைத்து, தஞ்சாவூரில் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை பாஜக மீது ஜிகே வாசன் மீது பலமாகவே விழுந்தது.
தேர்தல் முடிந்த பிறகு பாஜகவுடன் வாசனுக்கு நல்ல இணக்கமும் தென்பட்டே வந்தது. பாஜக தலைவர்கள் அவரை எப்படியாவது தங்கள் கட்சிக்குள் இழுக்க தீவிர முயற்சி செய்துவந்ததாககூட ஒரு தகவல் அடிபட்டது. இந்த சமயத்தில்தான் சீன அதிபர் வந்தார்.. சென்னை வந்த பிரதமரை ஜிகேவாசன் வரவேற்றபோது, சீக்கிரமா டெல்லி வந்து தன்னை சந்திக்குமாறு அழைப்பு விடுத்ததாகவும் அரசியலில் சலசலக்கப்பட்டது.

டீசன்ட் தலைவர்
இதற்கெல்லாம் என்ன காரணம்? வாசன் மீது பாஜகவுக்கு என்ன பிடிப்பு? என்பது தெரியவில்லை. ஆனால், வாசன் அமைதியானவர்.. பெரிய அளவு சர்ச்சைக்கு ஆளாகாதவர்.. ஒரு மென்மை போக்கையே எப்போதும் கடைப்பிடித்து வருபவர்.. தமிழகத்தில் அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு கட்சி தலைவர்!

வாசன்
தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பாஜக எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஜிகே வாசனின் சந்திப்பு. இன்று பிரதமரை வாசன் சந்தித்துள்ளது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

தமாகா?
வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி வருவதாகவும், இன்னொரு பக்கம், தமிழகத்தின் புதிய தலைவர் நியமனம் என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை மத்திய அமைச்சர் பதவி வாசனுக்கு தரப்பட்டால், தமாகா கலைக்கப்பட்டு விடுமா, பாஜகவுடன் இணைந்துவிடக்கூடுமா? அப்படியே இணைந்தாலும் வாசனின் தொண்டர்கள் அதை ஏற்பார்களா? தெரியவில்லை.

நியமனம்
அதேபோல, இப்போதைக்கு தமிழக பாஜகவுக்கு வலுவான ஒரு தலைவர்தான் தேவைப்படுகிறார்.. அவர் திமுக உள்ளிட்ட கட்சிகளை சமாளித்து பாஜகவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்றுதான் பாஜக தலைமை யோசித்தது. அதற்காககூட இந்த சந்திப்பு இருக்கலாம் என்கிறர்கள். அதற்கேற்றார்போல், மாநில தலைமை பதவிக்கு இதுவரை யாருமே நியமனம் செய்யப்படாமலும் உள்ளது.

மூப்பனார்
ஒருவேளை மாற்று கட்சியில் இருந்து ஒருவர் தமிழக பாஜக தலைவரானால், அதை இங்கிருக்கும் மற்ற தலைவர்கள் ஏற்பார்களா? தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடுமா? என்பதும் தெரியவில்லை. இது எல்லாவற்றையும்விட காங்கிரஸின் சித்தாந்தத்திலேயே பிறந்து வளர்ந்த வாசன், இந்துத்துவா கொள்கைக்கு எப்படி தன்னை ஆட்படுத்தி கொள்ள போகிறார் என்பது பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.

திருநாவுக்கரசர்
அதே நேரத்தில், திருநாவுக்கரசரை இப்படித்தான் பாஜகவில் இணைத்து, மத்திய அமைச்சர் பதவியும் தரப்பட்ட நிகழ்வும் நடந்திருப்பதையும் நினைவில்கொள்ள வேண்டி உள்ளது. பார்ப்போம்!
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications