அது என்ன செர்விகல் கேன்சர்? எப்படி ஏற்படும்? பூனம் பாண்டே சொல்லும் கொடும் நோய்.. என்ன செய்யும்?
சென்னை: நடிகையுமான பூனம் பாண்டே செர்விகல் கேன்சர் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரே அவர் செர்விகல் கேன்சருக்கு விழப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி செய்தார் என்பது தெரிய வந்தது. இந்த செர்விகல் கேன்சர் என்றால் என்ன.. இது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதைப் பார்க்கலாம்
பூனம் பாண்டேவின் சமூக வலைத்தள பக்கத்தில், "இன்று காலை எங்களுக்கு மோசமான நாளாக விடிந்தது. எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளோம். அவர் தான் பழகிய எல்லோரிடமும் தூய அன்புடனும் கருணையுடனும் இருந்தார். மிகவும் அன்பான நபர் அவர். இந்த துயர நேரத்தில், நாங்கள் அவரை அன்புடன் நினைவுகூறுகிறோம்" என்று பதிவிடப்பட்டது

இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இதற்கிடையே இன்று பூனம் பான்டே தனது சோஷியல் மீடியாவில் மற்றொரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது தான் உயிரிழக்கவில்லை என்றும் செர்விகல் கேன்சர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படிச் செய்ததாகக் கூறியிருந்தார். அவரது செயலுக்கு விமர்சனம் கிளம்பினாலும் கூட அவர் இந்த செர்விகல் கேன்சர் ரொம்பவே ஆபத்தானது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாயில் தொடங்கும் கேன்சர் உயிரணுக்களின் வளர்ச்சியாகும். கருப்பை வாய் என்பது கருப்பையின் கீழ் பகுதி ஆகும்.
எப்படி உருவாகும்?: HPV என்றும் அழைக்கப்படும் மனித பாப்பிலோமா வைரஸின் பல்வேறு strains மூலம் பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் ஏற்படும். HPV என்பது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். HPV க்கு பரவும் போது, உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு பொதுவாக அந்த வைரஸ் தீங்கு விளைவிக்காமல் தடுக்கிறது. ஆனாலும் சிலரும் இந்த வைரஸ் எதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.
இப்படி பெண்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை மீறி பாதிப்பை ஏற்படுத்தும் மனித பாப்பிலோமா வைரஸ் செல்கள்தான் கர்ப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும். கர்ப்பப்பை வாய் செல்களை புற்றுநோய் செல்களாக மாறிய பின் புற்றுநோய் பொதுவாக எப்படி பரவுமா அதேபோல்தான் இதுவும் பரவும்.
ஸ்கிரீனிங் சோதனைகள் மற்றும் HPV தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் தடுப்பூசியைப் பெறுவதன் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.
சிகிச்சை: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் போது, புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை மூலம் முதலில் சிகிச்சை அளிக்கப்படும். அதை தொடர்ந்து நடைபெறும் சிகிச்சைகளில் புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்துகள் கொடுக்கப்படும். கீமோதெரபி சிகிச்சை அதன்பின் தேவைப்பட்டால் அளிக்கப்படும் . சக்திவாய்ந்த கதிர்வீச்சு சிகிச்சையும் பலருக்கு அளிக்கப்படும்.
இதனால் கருப்பை நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் கூட பலருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
அறிகுறிகள்: இந்த கேன்சர் தொடங்கும் போது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பொதுவாக அறிகுறிகளை ஏற்படுத்தாது. ஆனால் வளரும்போது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் லேசான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்:
உடலுறவுக்குப் பிறகு, மாதவிடாய்க்கு இடையில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு மிக அதிகமாக இருக்கும். மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகமாக, வழக்கத்தை விட நீண்ட காலம் நீடிக்கும் கடுமையான இடுப்பு வலி அல்லது உடல் வலி அடிக்கடி ஏற்படும்.
சிகிச்சை: இந்த நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே பூனம் பாண்டே நேற்று தான் மரணமடைந்துவிட்டதாக 'சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications