அதென்ன CISF? அவர்களின் அதிகாரங்கள் தான் என்ன? திடீரென திருப்பரங்குன்றத்தில் இறங்கியது எப்படி!
சென்னை: மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் CISF குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டது சரியானது இல்லை குறித்து தமிழக அரசு இன்று தனது மேல்முறையீட்டில் வாதத்தை முன்வைத்திருந்தது. அது என்ன CISF.. இவர்கள் பணிகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் CISF பாதுகாப்போடு கோயில் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் CISF படைகளால் சட்ட ஒழுங்கை கையில் எடுக்க முடியாது என்று தமிழக அரசு வாதத்தை முன்வைத்தனர். இந்த வழக்கின் CISF செயல்பாடு குறித்தே தமிழக அரசு வாதத்தை முன்வைத்திருந்து. அதென்ன CISF.. இவர்கள் பணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சிஐஎஸ்எஃப்
CISF எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை என்பது இந்தியாவின் ஒரு முக்கியமான துணை ராணுவப் படையாகும். இது நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. சிஐஎஸ்எஃப் நமது நாட்டின் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) ஒன்றாகும். இது நேரடியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
1969ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் சிஐஎஸ்எஃப் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான பொதுத்துறை கட்டமைப்புகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. பின்னர் காலப்போக்கில், அதன் அதிகார வரம்பு விரிவடைந்துள்ளது.
என்ன வேலை
அதேநேரம் இன்னுமே கூட இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமான கட்டமைப்புகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பை வழங்குவதே சிஐஎஸ்எஃப்-இன் முதன்மை வேலையாக இருக்கிறது. வழக்கமான போலீசார் போல இல்லாமல்.. சிஐஎஸ்எஃப் வீரர்கள் தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
இந்தியாவின் முக்கியமான தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் ஒரே மத்தியப் படை இதுதான்.. ஸ்டீல் ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், அனல் மற்றும் நீர் மின் நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்களுக்கு சிஐஎஸ்எஃப் தான் பாதுகாப்பு அளிக்கிறது. அணுமின் நிலையங்கள், இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், நிலக்கரிச் சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள், கரன்சி அச்சடிக்கும் இடங்களிலும் இவர்கள் தான் பாதுகாப்பிற்கு இருப்பார்கள்.
ஏர்போர்ட், நினைவுச் சின்னங்கள்
1999ல் நடந்த கந்தஹார் விமானக் கடத்தலுக்குப் பிறகு.. சிவில் விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது நாட்டில் உள்ள கிட்டத்தட்ட எல்லா விமான நிலையங்களிலும் பயணிகள் சோதனை, லக்கேஜ் செக், ஏர்போர்ட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளை சிஐஎஸ்எஃப் மேற்கொள்கிறது. அதேபோல தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரியத் தளங்களுக்கும் சிஐஎஸ்எஃப் தான் வழங்குகிறது.

2023ல் நாடாளுமன்றத்தில் சிலர் அத்துமீறி பிரச்சினை செய்த நிலையில், அதன் பிறகு முக்கியமான அரசு கட்டிடங்களுக்குப் பாதுகாப்பு தரும் நடவடிக்கையிலும் சிஐஎஸ்எஃப் படையும் உள்ளே வந்துள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களில் மிக முக்கிய பதவிகளில் இருப்போருக்குப் பாதுகாப்பு கொடுக்கும் வேலையும் சிஐஎஸ்எஃப் செய்கிறது.
திருப்பரங்குன்ற கோயில்
நீதிமன்ற வளாகங்கள் வழக்கமாக உள்ளூர் போலீசார் வசமே இருக்கும். இருப்பினும் சில காரணங்களால் 2015ம் ஆண்டு முதலில் சென்னை ஐகோர்ட்டிற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு சென்னை ஐகோர்ட் மதுரை அமர்வுக்கும் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஐகோர்ட் மதுரைக் கிளையில் சிஐஎஸ்எஃப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த சிஐஎஸ்எஃப் வீரர்களைத் தான் திருப்பரங்குன்றம் அழைத்துச் சென்று தீபம் ஏற்றுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications