உலகத்தையே முடக்கிய மைக்ரோசாப்ட்.. பிரச்சனைக்கு காரணமான Crowdstrike-னா என்னனு தெரியுமா? முழு பின்னணி
சென்னை: மைக்ரோசாப்ட் நேற்று திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் விமானம் உள்பட பல்வேறு சேவைகள் முடங்கியது. அதன்பிறகு இரவில் இந்த முடக்கம் சரியானது. இந்நிலையில்தான் மைக்ரோசாப்ட் மொத்தமாக முடங்க காரணமான CrowdStrike என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மைக்ரோசாப்ட்.. உலகம் முழுவதும் பெயர் பெற்ற நிறுவனமாகும். இந்த மைக்ரோசாப்ட் விண்டோஸை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களின் பணிகள் அமைந்துள்ளன.

விமான சேவை, மீடியா, ஐடி நிறுவனங்கள், மருத்துவ சேவை உள்பட பல துறைகளின் பணிகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸின் பயன்பாடு அதிகம் உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று திடீரென்று மைக்ரோசாப்ட் முடங்கியது. மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error ஏற்பட்டது. இதனால் அவர்களால் பயன்படுத்த முடியாத நிலை உருவானது. இந்த பாதிப்பு Mac, Linux உள்ளிட்டவற்றில் இயங்கும் கணினிகளை பாதிக்கவில்லை. மாறாக விண்டோஸ் பயன்பாட்டு கம்ப்யூட்டர்களை மொத்தமாக முடக்கியது.
"நீல நிற ஸ்கிரீன்.." திடீரென அடுத்தடுத்து முடங்கும் கணினிகள்.. சரி செய்வது எப்படி! இது ரொம்பவே ஈஸி
இதனால் உலகம் முழுவதும் பல துறைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக விமான பயணிகளுக்கான டிக்கெட் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டது. கைகளால் எழுதப்பட்ட டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மைக்ரோசாப்ட் முடங்கியதற்கு CrowdStrike அப்டேட் தான் முக்கிய காரணமாகும். அதன்பிறகு நேற்று இரவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது மைக்ரோசாப்ட் மீண்டும் பிரச்சனையின்றி செயல்பட தொடங்கி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் மைக்ரோசாப்ட் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையும் முடங்க வைத்த CrowdStrike என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். அதாவது CrowdStrike என்பது சைபர் பாதுகாப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு 2011 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு அரசு துறை, வங்கி, விமான நிலையங்கள் தொடர்பான சாப்ட்வேர்களுக்கு சைபர் பாதுகாப்பை வழங்கி வருகிறது.
மைக்ரோசாஃப்ட் பஞ்சாயத்து.. சிக்கலில் விமான பயணிகள்! பாதுகாப்பு முக்கியம்.. மத்திய அமைச்சர் உத்தரவு
இந்த Crowdstrike என்பது சைபர் உலகில் மிகவும் பிரபலமானது. அதாவது நமது லேப்டாக்குகளை வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்க சில ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களை நாம் வைத்திருப்போம். அதேபோன்று மைக்ரோசாப்ட் நிறுவனம் சைபர் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள CrowdStrike-யை பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று மைக்ரேசாப்ட்டில் CrowdStrike-ல் அப்டேட் செய்யப்பட்டது. இந்த வேளையில் ஏற்பட்ட பிரச்சனையால் தான் Blue screen of Death Error ஏற்பட்டு மைக்ரோசாப்ட் முடங்கி மொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications