டெபாசிட் காலி என்றால் என்ன? தமிழ்நாட்டில் பல கட்சிகள் டெபாசிட் இழந்தும், தக்கவைத்த ஒரே ஒரு சுயேட்சை!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் ஏராளமான வேட்பாளர்கள் இந்த தேர்தலில் தங்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். டெபாசிட் இழப்பு என்றால் என்ன? தமிழ்நாட்டில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளார். அவர் யார்?
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை, அத்துடன் 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு மொத்தமாக 11 இடங்களில் டெபாசிட் காலியாகியுள்ளது. பாஜக கூட்டணி 22 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. பாமக 10 தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 6 இடத்தில் டெபாசிட் இழந்துள்ளது. தமாகா 3 இடங்களிலும் டெபாசிட் காலியானது. ஐஜேகே கட்சி 1 தொகுதிகளிலும், அமமுக 1 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளன. நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது.
டெபாசிட் இழப்பு என்றால் என்ன?: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1951-இன் படி மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். மக்களவைத் தேர்தலில் பட்டியலின, பழங்குடியின வேட்பாளர்கள் 12,500 ரூபாய் வைப்புத் தொகையாக தேர்தல் ஆணையத்தில் செலுத்த வேண்டும். அதேபோல், இதர பிரிவு வேட்பாளர்கள் 25 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு பொதுப் பிரிவினருக்கு டெபாசிட் தொகை 10 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு டெபாசிட் தொகை 5,000. இந்த டெபாசிட் தொகையை, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டும். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவாக வாக்குகளைப் பெறும் வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது. மற்றவர்கள் டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
டெபாசிட் தொகை என்ன ஆகும்?: பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு அதிகமான வாக்குகளைப் பெறாத வேட்பாளரின் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படாது. இதுவே டெபாசிட் இழப்பு எனப்படுகிறது. இப்படி தேர்தல் ஆணையத்திற்குக் கிடைக்கும் டெபாசிட் பணமானது அரசிடம் ஒப்படைக்கப்படும். இந்தத் தொகை தேர்தல் செலவினங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படும்.
ஒரே ஒரு சுயேட்சை எம்.பி: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 1 லட்சத்து 90 ஆயிரத்து 155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், 3,19,509 வாக்குகளைப் பெற்றுள்ளார். பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால் ஓ.பன்னீர்செல்வம் டெபாசிட்டை திரும்பப் பெறுகிறார். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வேட்பாளர்களே 7 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்த நிலையில், சுயேட்சையான ஓ.பன்னீர்செல்வம் டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்.
-
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications