சென்னையில் வெள்ளத்தில்.. சட்டென உற்றுப்பார்த்தால்! சாலையில் என்னங்க இது? இப்படி மிதக்குதே! ஜாக்கிரதை
சென்னை: சென்னையில் எதிர்பாராமல் ஏற்பட்டு உள்ள மாபெரும் வெள்ளத்திற்கு இடையே.. சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரில் காணப்பட்ட சில விஷயங்கள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இங்கே மீட்பு பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. மக்களை மீட்க கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கீழே மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன;.
மீட்பு பணிகள்: சென்னையில் இதனால் தொடர் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. மக்களை மீட்க கடுமையான பணிகளை அரசு இயந்திரம் மேற்கொண்டு வருகிறது. தன்னார்வலர்களும் கூட மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
சாலையில் மிதந்த வினோதம்:சென்னையில் எதிர்பாராமல் ஏற்பட்டு உள்ள மாபெரும் வெள்ளத்திற்கு இடையே.. சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரில் காணப்பட்ட சில விஷயங்கள் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி சாலையில் பல இடங்களில் விலங்குகள் செத்து மிதந்து உள்ளன. உதாரணமாக சென்னையில் அசோக் நகரில் சில இடங்களில் சாலைகளில் பார்த்த போது எலிகள், பூனைகள் செத்து மிதந்து உள்ளன. அதேபோல் சில இடங்களில் நாய்கள் கூட செத்து மிதந்து உள்ளன.
ஆதரவற்ற தெரு நாய்கள் நீரில் மூழ்கி தண்ணீரில் செத்து மிதந்து உள்ளன. இந்த நாய்களின் புகைப்படங்கள் இணையத்தை உலுக்கி உள்ளன. அதேபோல் பல இடங்களில் எலிகள் கொத்து கொத்தாக செத்து மிதந்து உள்ளன. இதனால் கடுமையான சுகாதார கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் வெள்ளம் வடிந்த பின் பல்வேறு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு உள்ளது.
கடுமையான மழை: நேற்று முதல்நாள் சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கனமழை பெய்தது. 2015 ஐ விட மோசமான கனமழை சென்னையில் பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்ய மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நேற்று முதல்நாள் சென்னையில் தாக்கியது. சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் புயல் நிலை கொண்டு இருந்தது. அங்கே இருந்தே புயல் மிக மிக மெதுவாக நகர்ந்தது. இதன் காரணமாகவே சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications