என்னங்க நடக்குது தமிழ்நாட்டில்? எடப்பாடிக்கு நேரடியாக போனை போடும் "டெல்லி".. அவரே இறங்கி வருகிறாராமே

பாஜக தலைவர்கள் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது, எதையும் பேச கூடாது என்று டெல்லி தரப்பு அட்வைஸ் செய்து உள்ளதாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் வரிசையாக அதிமுகவில் இணைந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் டெல்லி பாஜக நேரடியாக தலையிட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆடு பகை.. குட்டி உறவு என்பது போலத்தான் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அதாவது டெல்லி பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் அவர் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

சமீபத்தில் வடகிழக்கு மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வென்றதற்கு எடப்பாடி முதல் ஆளாக வாழ்த்து சொன்னார். அங்கே பாஜகவை வாழ்த்திவிட்டு அந்த ஈரம் காயும் முன் தமிழ்நாட்டில் பாஜக தலைவர்களை அதிமுகவை நோக்கி தூக்கினார்.

டெல்லி

டெல்லி

டெல்லி பாஜகவோடு நெருக்கமாக இருந்தாலும், அவர் தமிழ்நாடு பாஜக தலைவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது பற்றி டெல்லி பாஜக தலைகள் நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் பேச உள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக பாஜகவினர் வரிசையாக தமிழ்நாட்டில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

மேலும் தனக்கு நெருக்கமான பல நிர்வாகிகளை அதிமுக நோக்கி அவர் இழுத்து வருகிறார். அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இது நேற்று லதா - பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு வைதேகி - பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அண்ணாமலை

அண்ணாமலை

இதை எதிர்த்து பேசிய அண்ணாமலை, பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் எடப்பாடியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்த சம்பவங்களும் நடந்தது

அமர் பிரசாத்

அமர் பிரசாத்

இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?
இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

எடப்பாடி

எடப்பாடி

இதற்கு எடப்பாடி தரப்பில் இருந்து ஜெயக்குமாரும் கடுமையான பதிலடி கொடுத்து இருந்தார். அதில், அதிமுக என்பது கண்ணாடி கல் அல்ல சமுத்திரம். அதிமுக என்ற சமுத்திரத்தில் கல் வீசினால் அந்த கல்தான் காணாமல் போகும். அதிமுகவில் அனைத்து கட்சியினரும் வந்து சேருகின்றனர். 2016ல் எனக்கு சீட் கொடுத்து ஜெயிக்க வைத்து அமைச்சராக்கியவர் ஜெயலலிதா. மீசை வைத்தவர் எல்லாம் கட்ட பொம்மன் கிடையாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாவாக முடியாது. ஜெயலலிதாவிற்கு நிகரான தலைவர் யாரும் இனி வர முடியாது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன்தான் கூட்டணி என்பதில் மாற்று கருத்து இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மோதல்

மோதல்

அதிமுக - பாஜக மோதலால் எங்கே இவர்கள் கூட்டணி உடைக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு டெல்லி பாஜகவிற்கும் இந்த மோதல் குறித்து தகவல் சென்றுள்ளது. என்னதான் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று டெல்லி பாஜக இதை பற்றி விசாரித்து உள்ளதாம். இது தொடர்பாக நேரடியாக பாஜக தேசிய தலைவர் நட்டா, தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் தலையிட்டு எடப்பாடியிடம் பேச போவதாக தகவல் வெளியாகி உள்ளது. போன் மூலம் இவர்கள் எடப்பாடியிடம் நேரடியாக பேசி அவரின் நிலைப்பாட்டை கேட்க வாய்ப்பு உள்ளது. அதன்பின் இதில் நட்டா ஒரு முடிவை எடுப்பார். அதுவரை பாஜக தலைவர்கள் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது, எதையும் பேச கூடாது என்று டெல்லி தரப்பு அட்வைஸ் செய்து உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+