வெளியே போங்க! எடுத்தெறிந்து பேசிய சீமான்.. நாம் தமிழர் அஸ்திவாரத்திற்கே சிக்கல்? உளவுத்துறை கேம்!
நாம் தமிழர் கட்சியை கரைப்பதில் ஆளும் கட்சியின் உளவுத்துறை வேகமாக விளையாடியதில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பலரும் அண்மைக்காலங்களில் அக்கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கி உள்ளது. அந்த கட்சியில் மீண்டும் கட்சி மாறும் படலம் தொடங்கி உள்ளது.

அதன்படி முதல் ஆளாக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் தலைமையில் அண்மையில் அறிவித்தனர். இதுதான் நாம் தமிழர் கட்சியின் பிரிவினைக்கு தொடக்க புள்ளியாக இருகாது.
அதைத்தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுகுமார், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது கட்சியில் மேலும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் யாரையும் தடுத்து நிறுத்த நாம் தமிழர் கட்சியின் சீமான் நினைக்கவில்லை. போனால் போகட்டும்.. கட்சி யாரையும் நம்பி இல்லை என்று சீமான் கூறியதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சீமானின் கோபம்: சீமானின் பேச்சும் சமீபகாலமாக கட்சியினருக்கு எதிராகவே இருந்து வருகிறது. குறிப்பாக, மக்கள் ஓட்டு போடுறது எனக்காகத்தான், ; உங்கள் யாருக்கும் கிடையாது. இருக்கிறவன் இருங்க ; விருப்பம் இல்லாதவன் வெளியே போங்க என்று எடுத்தெறிந்து அவர் தொடர்ந்து பேசுவதில் கட்சிக்குள் அவருக்கு எதிரான அதிருப்திகள் அதிகரித்தபடி இருந்து வருகிறது.
அதிருப்தியாளர்கள் அனைவரையும், கட்சியிலிருந்து விலகிய நாம் தமிழர் மா.செ.க்கள் ஒன்றிணைத்து வருகிறார்கள். இவர்கள் தொடர்ச்சியான ஆலோசனையில் இருக்கின்றனர். ஒரு கட்சியின் தலைவரின் நடவடிக்கை இப்படியெல்லாம் இருக்கக்கூடாது; அதிமுகவின் சர்வாதிகாரி, இரும்புபெண்மணி என்றெல்லாம் சொல்லப்பட்ட ஜெயலலிதா கூட , அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக ஒரு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தப் பிறகு தான் அப்படி மாறினார்.
சீமான் மீது கோபம்: ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வை கூட பெற்றுத் தரமுடியாத சீமான், இப்படி எதேச்சதிகார பாணியில் கட்சியினரிடம் நடந்து கொள்வது ஆரோக்கியமில்லை என்கிற அளவில் அவர்களின் அதிருப்திகள் வெடித்தபடி இருக்கிறது. அக்கட்சியிலிருந்து விலகிய மா.செ.க்கள், அதிருப்தியாளர்களிடம், நமக்கான அரசியலை நாம் எடுத்தாக வேண்டும். சும்மா இருந்துவிட முடியாது.
விரைவில் முடிவு: அதனால், திமுகவில் இணையலாமா? அல்லது விஜய் கட்சியில் சேரலாமா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறனர். அதற்கு, கலவையான பதிலே கிடைத்திருக்கிறது. இன்னும் தீர்க்கமாக ஆலோசித்துவிட்டு ஒரு முடிவை எடுப்போம் என்கிற அளவில் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்திருக்கும் ஒரு மா.செ., திமுகவில் இணைய விரும்புகிறோம் என்று திமுகவின் துணைத் தலைமைக்கு தகவல் அனுப்ப, துணைத் தலைமையோ, இப்போதைக்கு வேண்டாம் ; தேர்தல் நேரத்தில் இணையலாம்.
இப்போதைக்கு சைலண்டாக உங்கள் அரசியலை செய்து கொண்டிருங்கள் என சொல்லியிருக்கிறதாம். காரணம், இப்போதைக்கு இணைவதால் எந்த தாக்கமும் ஏற்படாது ; தேர்தல் சமயத்தில் இணைய வைத்தால் தாக்கம் பெரிதாக இருக்கும் என்பதுதான்.












Click it and Unblock the Notifications