நோட் பண்ணீங்களா? 1 வாரம்தான்.. அடுத்தடுத்து "வெள்ளை" கொடி காட்டும் பாஜக - திமுக.. அப்போ அதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக - திமுக இடையே திடீரென கொஞ்சம் சுமுகமான உறவு ஏற்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் உலகில் இது பல விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு அரசியலில் விக்னேஷ் மரணம், தருமபுரம் பல்லக்கு ஆதீனம் சர்ச்சை போன்ற விவரங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலும் நெருங்கி வருகிறது.

இதில் எப்படியாவது எதிர்க்கட்சிகள் ஏற்க கூடிய பொது வேட்பாளரை நிறுத்தி குடியரசுத் தலைவராக வெற்றிபெற வைத்து விட வேண்டும் என்று திட்டத்தில் பாஜக இருக்கிறது.

பாஜக பிளான்

பாஜக பிளான்

இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் பெரும்பான்மை வாக்குகளை பெற்று இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். ஆனால் இந்த முறை பாஜகவிற்கு கண்டிப்பாக மாநில கட்சிகள் ஏதாவது ஒன்றை ஆதரவாவது தேவைப்படும். அதாவது திமுகவோ அல்லது பாஜக கூட்டணியில் இல்லாத வேறு ஏதாவது ஒரு மாநில ஆளும் கட்சியோ பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

கடும் மோதல்

கடும் மோதல்

ஆனால் திமுகவிற்கு பாஜகவிற்கு இடையில் சமீபத்தில் பல விவகாரங்களில் கடும் மோதல் நிலவி வந்தது. முக்கியமாக ஆளுநர் தொடர்பான விஷயங்களில் கடும் மோதல் நிலவியது. ஆளுநரின் துணை வேந்தர் மாநாடு ஆளும் தரப்பை டென்சன் ஆக்கியது. அதேபோல் இன்னொரு பக்கம் ஆளுநருக்கு எதிராக துணை வேந்தர் நியமன மசோதாவையும் ஆளும் திமுக நிறைவேற்றியது. இதனால் திமுக vs பாஜக இடையிலான மோதல் பெரிதாக போவதாக எதிர்பார்க்கப்பட்டது.

இறங்கி வந்த ஆளுனர்

இறங்கி வந்த ஆளுனர்

ஆனால் திடீர் திருப்பமாக ஆளுநர் ரவி நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பினார். பெரிய சண்டைக்கு முன் திடீரென வெள்ளை கொடி காட்டுவது போல ஆளுநர் ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அதோடு இல்லாமல், ஆளுநரின் தனி செயலாளர் இதை முதல்வர் சட்டசபையில் இடைவெளியில் இருக்கும் போதே போன் செய்தும் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம்தான் இரண்டு தரப்பு மோதலை அப்படியே ஆப் செய்து கூலாக்கி உள்ளது.

நன்றி சொன்ன முரசொலி

நன்றி சொன்ன முரசொலி

இந்த விஷயம் நடந்ததும்.. அத்தனை நாட்கள் ஆளுநரை விமர்சனம் செய்து வந்த முரசொலியும் ஆளுநருக்கு நன்றி தெரிவித்துள்ளது. அவரது விடாமுயற்சியின் பயன் தான், ஆளுநர் எடுத்த முடிவாகும். இத்தகைய முடிவை ஆளுநர் அவர்கள் முன்கூட்டியே எடுத்திருக்கலாம். அரசியல் எல்லைகளைக் கடந்து கனிவுடன் கவனிக்க வேண்டிய மசோதா அது. அதனை காலம் கடந்தாவது ஆளுநர் அவர்கள் புரிந்து கொண்டுள்ளார் என்பதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதனை முன்கூட்டியே எடுத்திருந்தால் கடந்த 228 நாட்களின் கசப்பைத் தவிர்த்து இருக்கலாம் என்று முரசொலியும் ஆளுநர் ரவிக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அண்ணாமலை உதயநிதி

அண்ணாமலை உதயநிதி

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அண்ணாமலையும் கொஞ்சம் இறங்கி வந்து பேசி இருக்கிறார். இத்தனை காலம் வாரிசு அரசியலுக்கு எதிராக பாஜக பேசி வந்தது. ஆனால் தற்போது பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் நினைத்தால் எந்த எம்எல்ஏவையும் அமைச்சராக்க முடியும். அவர் நினைத்தால் யாரையும் அமைச்சராக்க முடியும். உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும் அதுதான் நடைமுறை. மக்களால் தேர்வான எம்எல்ஏ அமைச்சராக முடியும். யார் அமைச்சர் ஆனாலும் அதற்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி டாக்

செந்தில் பாலாஜி டாக்

திடீரென உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை இப்படி சாப்ட்டாக பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. உதயநிதி பற்றி கடுமையாக விமர்சிக்காமல்.. இப்படி வாழ்த்துக்கள் சொன்னது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் பாஜக சார்பாக அண்ணாமலை இப்போது சில நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விமர்சனம் செய்யவில்லை. செந்தில் பாலாஜி பற்றி பெரிதாக கருத்து சொல்லாமல் கொஞ்சம் மென்மையான போக்கை அண்ணாமலை கடைபிடிக்க தொடங்கி உள்ளார்.

என்னங்க நடக்குது?

என்னங்க நடக்குது?

1 வாரத்தில்.. இப்படி திடீரென ஆளுநர் முடிவு.. முரசொலி நன்றி.. அண்ணாமலை பேச்சு என்று அடுத்தடுத்து திமுக - பாஜக மோதலில் பல ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதற்காக இரண்டு பக்கமும் திடீரென இறங்கி போக தொடங்கி உள்ளன என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. இந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு பாஜக திமுகவின் ஆதரவை எதிர்பார்க்கும் என்று கூறப்படும் நிலையில்தான் இந்த தொடர் சம்பவங்கள் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+