சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் கன்டிஷன்.. ஆர்டர் போட்ட ஸ்டாலின்.. கூட்டணிக்கு அதிக இடங்களை திமுக விட்டுத் தந்தது ஏன்?

லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக அதிக இடங்களை விட்டுத்தருவதற்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக அதிக இடங்களை விட்டுத்தருவதற்கு பின் முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

    லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். நாளை திமுக கூட்டணி முழு வடிவம் பெற இருக்கிறது.

    இன்றே முக்கால்வாசி கட்சிகளுடன் திமுக தனது கூட்டணி ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. வரிசையாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளில் முக்கிய நிபந்தனை ஒன்றுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கிறது.

    என்னாச்சு ஸ்டாலினுக்கு.. போற போக்கை பார்த்தால் திமுகவுக்கு 22 சீட்தான் மிஞ்சும் போலயே! என்னாச்சு ஸ்டாலினுக்கு.. போற போக்கை பார்த்தால் திமுகவுக்கு 22 சீட்தான் மிஞ்சும் போலயே!

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    திமுக தற்போது உருவாக்கியுள்ள கூட்டணியின்படி, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 10 இடங்கள், விசிக 2 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்கள், மனித நேய மக்கள் கட்சிக்கு 1, கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு 1 இடம், மதிமுகவிற்கு 2 இடம் (இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 இடம் (நாளை அறிவிக்கப்படும்) ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    எத்தனை போகிறது

    எத்தனை போகிறது

    இதில் 40 தொகுதிகளில் மொத்தம் 19 இடங்கள் கூட்டணி கட்சிக்கே போய்விடுகிறது. இதில் மீதமுள்ள 21 இடங்களில் திமுக போட்டியிட உள்ளது. சமயங்களில் இன்னும் ஒரு தொகுதியை வேறு புதிய கூட்டணி கட்சிக்கு கொடுத்துவிட்டு 20 தொகுதிகளில் மட்டுமே கூட போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    திமுக இப்படி போட்டியிட காரணம் சட்டமன்ற இடைத்தேர்தல் என்று கூறுகிறார்கள். 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதிமுக தரப்பு இதற்கு ஏற்கனவே தயாராகிவிட்டது. இந்த நிலையில் திமுகவும் இதற்கு தயாராகும் வகையில் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    அளிக்க முடியாது

    அளிக்க முடியாது

    அதன்படி இந்த கூட்டணி கட்சிகளுக்கு சட்டமன்ற தேர்தலில் இடமளிக்கப்படாது. திமுக மட்டுமே அனைத்து தொகுதியிலும் நிற்கும். 21 இடங்களிலும் பெரும்பாலும் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்கிறார்கள்.

    என்ன சின்னம்

    என்ன சின்னம்

    அதேபோல் லோக்சபா தேர்தலிலும் இது பெரிய பிரச்சனையாக இருக்காது. இந்த் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் விசிக, கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிட உள்ளது. அதன்படி 24-27 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் களம் காணுகிறது.

    இந்த நிபந்தனை

    இந்த நிபந்தனை

    இந்த உதயசூரியன் என்ற நிபந்தனையுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தையையே முடிந்து இருக்கிறது. சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அப்படி என்றால் இரண்டு தொகுதி கொடுக்கிறோம் என்று கூறி ஸ்டாலின் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    What is on M K Stalin's mind? The real reason why DMK gave away too many seats to small parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X