ரமலான் பண்டிகை ஏன் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.. நோன்பின் சிறப்பம்சம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈகை திருநாள் அதாவது ரம்ஜான் பண்டிகை, உலகில் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

இஸ்லாமியர்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் தலை பிறை தோன்றியதும், முக்கிய கடமையாகிய நோன்பு எடுத்து, தங்கள் புலனடக்கத்தையும், மன கட்டுப்பாட்டையும் உருவாக்குகிற சிறந்த ஆன்மிக பயிற்சி என்றும் கூறலாம். ஒரு மாத காலம் வரை, இறை கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தங்கள் பசி மற்றும் தாகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, ஏழைகளின் பசி, தாக உணர்வை புரிந்துகொள்கிறார்கள். சக மனிதனின் பசியை போக்குவதை விட புண்ணியம் இருக்க முடியுமா. ஆனால் அதைச் செய்ய முதலில் பசி என்றால் என்ன என்பதை தானம் கொடுப்போர் அறிந்திருக்க வேண்டும். அல்லது தானம் இருமாப்புடன் கூடியதாக மட்டுமே இருக்கும். எனவேதான் இந்த நோன்பு நாளை பசி, தாகம் அறியும் நாட்களாக பயன்படுத்த வாய்ப்பு உருவாக்கி கொடுக்கிறது.ஏழைகளுக்கு தேவைகளை அறிந்து அவர்களுக்கு கொடுத்து மகிழ்விக்கும் மனப்பாங்கை நோன்பு உருவாக்கி கொடுக்கிறது.

நோன்பு கடமை நிறைவேறியபின்பு, ரம்ஜான் (ஈத்) பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களும், தங்கள் வழிபாட்டு ஸ்தலங்கள், மற்றும் பொது இடங்களில் திறந்த வெளியில் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பு தொழுகை செய்வது வழக்கமாகும்.

What is Ramzan Festival? And the Highlights Of Fasting

இந்த ஈகை திருநாளில் சிறப்பு தொழுகை செய்து முடிந்தபின்பு, இறைவனின் பெயரில் பலியிடுவது சிறப்பம்சமாகும். தங்கள் வீட்டில் ஆடு, மாடு, ஒட்டகம், ஆகியவற்றை பலியிட்டு, 3 பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், ஏழைகளுக்கும், மூன்றாவது பங்கை தங்கள் தேவைக்கு பயன்படுத்துகின்றனர். புதிய புத்தாடை அணிந்து சிறப்பான, சுவையான பிரியாணி உணவு வகைகளை செய்து குடும்ப, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, வாழ்த்து கூறி அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+