Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை காலமே வரல.. அதுக்குள்ள இந்தளவு வெயில்.. அப்போ மே மாசம் என்ன ஆகும்! வல்லுநர்கள் வார்னிங்

கடந்தாண்டுகளை விட வெப்பம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இப்போது பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டுள்ளது. இந்தளவுக்கு வெப்பம் அதிகரிக்க என்ன காரணம்.. வரும் நாட்களில் வெப்பம் எப்படி இருக்கும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்போது தான் பிப்ரவரி மாதம். ஆனால், இப்போதே பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஏதோ கோடைக் காலங்களில் இருப்பதைப் போலப் பல இடங்களில் இப்போதே வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.

வரும் கோடைக் காலத்தில் வெப்பம் மிக மோசமாகவும் இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாகவே இது இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏன் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது என்றும் வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்கலாம்.

வெப்பம்

வெப்பம்

கடந்த காலங்களில் பிப். மாதம் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது இல்லை. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில், கோடைக்காலம் தொடங்கிவிட்டதைப் போல வெப்பம் இருக்கிறது. இது கோடைக் காலத்தில் வெப்ப அலை கூட ஏற்படும் அபாயம் உள்ளதையே காட்டுகிறது.. அடுத்து வரும் நாட்களில் இந்த வெப்பம் சற்று குறையலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வரும் நாட்களிலும் வெப்பம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இயல்பு வெப்பம்

இயல்பு வெப்பம்

கடந்த 1981 முதல் 2010 வரை கடந்த 30 ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் சராசரி அதிகபட்ச வெப்பம் 28 டிகிரி செல்சியஸாகவே இருந்துள்ளது. இதுவே இயல்பான வெப்பம் என்று கூறப்படுகிறது. அதேபோல குறைந்தபட்ச வெப்பம் 15 டிகிரி செல்சியஸாக இருக்கும். இது சராசரி வெப்பமாக இருந்தாலும் கூட.. இந்தியா போன்ற பெரிய நாட்டில் இது பிராந்தியங்களில் மாறுபடும்.. வடமேற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும்.

இயல்பை விட அதிகம்

இயல்பை விட அதிகம்

இருப்பினும், பிப் மாதம் நாட்டில் பல மாநிலங்களின் கடந்த காலங்களில் இருந்த வெப்பத்தைக் காட்டிலும் 5-11 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருந்துள்ளது. வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் (104 பாரன்ஹீட்) தாண்டினால் அல்லது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியல் அதிகமாக இருந்தால்.. அதை வெப்ப அலை என்று வானிலை வல்லுநர்கள் குறிப்பிடுவார்கள். இதை வைத்துப் பார்த்தோம் என்றால் இப்போது நாட்டில் பல இடங்களில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இதுபோன்ற வெப்பம் பொதுவாக ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் தான் இருக்கும்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதுபோன்ற தீவிர வானிலை பாதிப்புகளுக்குக் காலநிலை மாற்றமே முக்கிய காரணமாகும். பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற அதிக வெப்பத்திற்குக் காலநிலை மாற்றம் முக்கிய காரணமாக இருக்கும். ஆனால், இந்த அசாதாரண மாற்றத்தில் எந்தவொரு பேட்டர்னும் இல்லை.. எனவே, இந்த அதிதீவிர வெப்பத்திற்குக் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று நம்மால் சொல்லிவிட முடியாது.. தீவிர வானிலை நிகழ்வுகளில் சீரற்ற தன்மை பல்வேறு உள்ளூர் மற்றும் குறுகிய கால தற்செயல் நிகழ்வுகளும் கூட காரணமாக அமைந்துவிடுகிறது.

இந்தியாவில் வெப்பம்

இந்தியாவில் வெப்பம்

மேற்கில் இருந்து வரும் காற்று பொதுவாக ஓரளவுக்கு நல்ல மழையைக் கொடுத்து வெப்பத்தையும் தணிக்க உதவும். ஆனால், இந்த முறை இந்த காற்றும் இல்லாமல் போனது வெப்பம் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடிட்டது. மேலும், மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும் கூட வழக்கைத்தை விடக் குறைவாகப் பெய்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் அதிகரித்தும் மழை, பனி குறைத்துமே காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

சர்வதேச அளவிலும் கூட கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வெப்பம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வலுவான லா நினா நிகழ்வு வலுவிழப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். லா நினா என்பது பூமத்திய ரேகை பகுதியில் இருக்கும் பசிபிக் பெருங்கடலில் சாதாரண மேற்பரப்பு நீரை விட குளிர்ச்சியாக இருப்பதைக் குறிக்கிறது.. இது சர்வதேச வானிலையையும் கூட பாதிக்கிறது. லா நினா என்பது பூமியின் வளிமண்டலத்திலும் தற்காலிக குளிர்ச்சி விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகவே கடந்த இரு ஆண்டுகள் ஓப்பிட்டளவில் குறைவாக இருந்தது.

வரும் காலம்

வரும் காலம்

கடந்த 2022இல் உலகின் சராசரி வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முந்தைய நிலையைவிட 1.15 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்தது. இந்தியாவிலும் கூட வரலாற்றில் ஐந்தாவது வெப்பமான ஆண்டாக அது மாறியது. லா நினா நிகழ்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால் வெப்பம் இன்னுமே அதிகரித்திருக்கும் என உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போது லா நினா நிகழ்வு முடிவுக்கு வரும் நிலையில், வெப்பம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உச்சத்தில் வெப்பம்

உச்சத்தில் வெப்பம்

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள ஆண்டுகளில் 2016 தான் வெப்பமான ஆண்டாக அமைந்துள்ளது. அப்போது சராசரி வெப்பத்தை விட வெப்பம் 1.28 டிகிரி அதிகமாக இருந்தது. கடந்த 2015-2022 வரையிலான 8 ஆண்டுகள் இதுவரை பதிவான வெப்பமான எட்டு ஆண்டுகளாக அமைந்துவிட்டது. இப்போது லா நினா நிகழ்வும் முடிவுக்கு வரும் நிலையில், வரும் காலங்களில் வெப்பம் உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+