ஆஹா.. அது என்ன 42? ரொம்ப சுவாரசியமா இருக்கே? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பை பார்த்து நீதிபதிகள் கேட்ட கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று அதிமுக விதி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முக்கியமான சில கேள்விகளை கேட்டனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

பொதுக்குழு வழக்கு

பொதுக்குழு வழக்கு

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு தொடுத்து உள்ளது. இந்த வழக்குதான் தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்குழு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த அதிமுக பொதுக்குழு வழக்கை 1 வாரத்தில் விசாரித்து முடிக்க நினைக்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வாரமே விசாரணையை முடிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். நாளை வரை மட்டுமே இந்த வாரம் விசாரணை நடக்கும் என்பதால் நாளையோடு வழக்கு விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதிகள்

நீதிபதிகள்

இன்று அதிமுக பொதுக்குழு வழக்கு தொடங்கியதும் நீதிபதிகள் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்தனர். கொடுக்கப்பட்ட நேரங்களில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை வைத்துவிட வேண்டும். அதோடு ஏற்கனவே சொன்ன கருத்துக்களை மீண்டும் மீண்டும் சொல்ல கூடாது என்று குறிப்பிட்டனர். இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவிக்குத்தான் அனைத்து பவர்களும் இருந்தன. ஆனால் 2017ல் இந்த பதவி நீக்கப்பட்டது. செயற்குழு மற்றும் பொதுக்குழு மூலம் இந்த பதவி நீக்கப்பட்டது. அதன்பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இரண்டு பேர்

இரண்டு பேர்

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் என்பது பொதுச்செயலாளரின் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி ஆகும். இந்த பதவி என்பது தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமே , பொதுச்செயலாளர் பதவிக்கு பின் நேரடியாக தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள் ஆகும். இந்த பதவிகளுக்கு எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானார்கள். இதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.

விதி சுவாரசியம்

விதி சுவாரசியம்

அதிமுகவின் கட்சி விதி 42ன்படி உட்கட்சி முடிவுகளை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒன்றாக எடுக்க வேண்டும். அதாவது கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்தில் இரண்டு பேரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி நிதி சார்ந்த விவகாரங்களில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி கணக்கு வழக்குகளில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதில் இவர்கள் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். இருவரும் ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும்.

நீதிபதிகள்

நீதிபதிகள்

ஆனால் அதில் ஒருங்கிணைப்பாளரை இவர்கள் கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர். அந்த பதவிகளையும் நீக்கி உள்ளனர் என்று வைரமுத்து தரப்பு வாதம் வைத்தது. இதை கேட்ட நீதிபதிகள் இருவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று விதி உள்ளதா.. அது என்ன விதி என்று கேட்டனர். அதற்கு வைரமுத்து தரப்பு, அதிமுகவின் கட்சி விதி 42 அது என்று கூறினார். இதையடுத்து ஓ இந்த 42 விதியில் இருவரும் ஒன்றாக ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும் என்று சொல்கிறதா? இந்த விதி சுவாரசியமாக இருக்கிறதே என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+