பல நாடுகளில்.. பிரபலங்கள் இடையே டிரெண்ட் ஆகும் "ஷாம்" விவாகரத்து.. அது என்ன போலி விவாகரத்து?
சென்னை: உலகம் முழுக்க பல நாடுகளில் போலி விவாகரத்து என்ற.. Sham Divorce விவகாரம் டிரெண்டாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் இதை செய்து வருவதாக உலக அளவில் புகார்கள் வைக்கப்படுகின்றன. அது என்ன Sham Divorce.. பிரபலங்கள் இதை செய்வது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட கால காதலி, மனைவி சைந்தவியை விவாகரத்து செய்தார். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மனஸ்தாபம் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். இது போக நடிகை சமந்தா - நாக சைத்தன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நேற்று ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர்.
இந்த விவாகரத்திற்கு இடையேதான் Sham Divorce என்ற பதம் கவனம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்.. மேலே குறிப்பிட்ட யாரும் Sham Divorce செய்தனர் என்று கூறவில்லை. அவர்களின் விவாகரத்து எதுவும் போலியானது கிடையாது. ஆனால் இந்த விவாகரத்துகளுக்கு இடையேதான் தற்போது Sham Divorce விவகாரம் டிரெண்டாகி வருகிறது. சரி அது என்ன போலி விவாகரத்து..
1. உதாரணமாக கணவன் - மனைவி இணைந்து இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. அவர்களின் வருமானம் , சொத்துக்களுக்கு வருடா வருடம் பல கோடி வரி செலுத்த வேண்டும்.
2. அதுவே அவர்கள் சட்ட ரீதியாக பிரிந்து இருந்தால்.. இரண்டு பேரும் செலுத்தும் வரி வெகுவாக குறையும்.
3. அதோடு இரண்டு பேருக்குமான சொத்து தொடர்பான வரிகளும் குறையும்.
4. உலக அளவில் பல பிரபலங்கள் சட்ட ரீதியாக பிரிந்தாலும்.. தொடர்ந்து சேர்ந்து வாழும் பழக்கங்களை கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சட்ட ரீதியாக பிரிந்து.. அதன் மூலம் வரி சலுகைகளை பெற்றுக்கொண்டு.. சட்ட ரீதியாக இல்லாமல் சேர்ந்து வாழும் வழக்கம் பிரபலங்கள் இடையே அதிகரித்து உள்ளன.
5. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த பழக்கம் சட்ட விரோதமானது. ஆனால் இந்தியாவில் முறையாக இதற்கான சட்டங்கள் கிடையாது.
6. இந்தியாவில் இரண்டு பேர் சேர்ந்து வாழ்வது சட்ட ரீதியாக தவறானது கிடையாது. இருவரும் ஒப்புதலோடு வாழ்வது விவாகரத்திற்கு பின்பும் தவறும் கிடையாது என்பதால் "ஷாம்" விவாகரத்து. தவறு கிடையாது என்றே சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications