தமிழ்நாட்டில் அடுத்த வாரம் தொடங்கும் SIR..பீகாரில் எதிர்ப்பு கிளம்பியது ஏன்? வாக்காளர்களே கவனமாக இருங்க
சென்னை: தமிழகத்தில் SIR எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவலை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது. இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மேற்கொண்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் தொடங்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த SIR என்பது என்ன? பீகாரில் எதிர்க்கட்சிகள் எதிர்க்க என்ன காரணம்? என்பது பற்றிய முழு விவரங்கள் வருமாறு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரங்களை தொடங்கி உள்ளதோடு, கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி ‛சார்' எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR or Special Intensive Revision) மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொரடர்பாக ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலங்களுடன் தனித்தினயாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பாக பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அப்போது காங்கிரஸ், ஆர்ஜேடி உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தன. இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனால் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்த்தது ஏன்? என்று கேட்டால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு கடைப்பிடிக்கப்படும் ரூல்ஸ் தான். அதாவது முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். பொதுவாக ஒரு சட்டசபை தேர்தலுக்கும், இன்னொரு சட்டசபை தேர்தலுக்கும் இடையே அவ்வப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை மட்டுமே மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மொத்தமாக வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து பலமுறை ஓட்டளித்து இருப்பவர்கள் உள்பட புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்போர் என அனைவரும் புதிய படிவங்களை உரிய ஆவணங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும். 2003க்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். கூடவே பெற்றோர்களில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை சமர்ப்பித்தால் ஓட்டுரிமை அப்படியே இருக்கும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். இதனால் தான் இந்த முறையை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர். பீகாரில் பலரும் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால் அவர்களால் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது. ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தால் அதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர்.
அதேவேளையில் தேர்தல் ஆணையம் தரப்பில், ‛சார்' என்பதன் நோக்கம் தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் நோக்கமாக கொண்டது என்று கூறி வருகிறது. அதுமட்டுமின்றி நகரமயாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற பல காரணங்களால் தான் இந்த தீவிர திருத்தம் செய்யப்படுகிறது என்று தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். இப்படியான சூழலில் தான் தமிழ்நாட்டில் இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் இந்த ‛சார்' ஒன்றும் புதிய நடவடிக்கை இல்லை. கடந்த 2003-ம் ஆண்டு கடைசியாக வாக்காளர் திருத்தம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகிறது. கடைசியாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கூட வெளியானது. அதன்படி 2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள், வாக்காளர் பதிவுப் படிவங்களை உரிய ஆவணங்களுடன் திரும்பவும் சமர்ப்பிக்க வேண்டும். 2003-க்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். கூடவே பெற்றோர்களில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை சமர்ப்பித்தால் ஓட்டுரிமை அப்படியே இருக்கும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ‛சார்' எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம். அதாவது, 2 கட்டங்களாக இந்த பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும்மாநிலங்களிலும் 2வது கட்டமாக பிற மாநிலங்களிலும் இந்த பணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் தேதி, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு ஆவணங்கள் உள்ளிட்ட விஷயங்களை தேர்தல் ஆணையம் தான் முறைப்படி அறிவிக்கும். அதன்பிறகே தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கும் என்பது தெரியவரும்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும்












Click it and Unblock the Notifications