நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?
சென்னை: தவெக அரசின் பலம் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் ஆட்சிக்கு ஏற்பட வாய்ப்புள்ள நெருக்கடிகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.. குறிப்பாக, தவெக அரசுக்கு சட்டமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பலம் மற்றும் ஒருவேளை ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி, பேட்டி ஒன்றில் விரிவாகவே கூறியிருக்கிறார். அதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "மத்திய அமைச்சர்களையும் பிரதமரையும் விஜய் இன்று சந்திக்கும்போது அவர்கள் பிஎம் ஸ்ரீ (PM Shri) கல்வித் திட்டத்தை நிச்சயம் கோடிட்டு காட்டுவார்கள்..

மத்திய அரசு அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் சந்தித்துப் பேசும் பொழுது, இந்த பிஎம் ஸ்ரீ திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய்யிடம் பிரதமரும் வலியுறுத்துவார், உள்துறை அமைச்சரும் வலியுறுத்துவார்.. சிபி ராதாகிருஷ்ணனும் வலியுறுத்துவார்.. நிர்மலா சீதாராமனை நிதி விவகாரங்கள் சம்பந்தமாகச் சந்திக்கும்போது அவரும் இதையே வலியுறுத்துவார்..
இதில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்றுதான் தெரியவில்லை.. அவர் அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்வாரா என்று புரியவில்லை.. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் விஜய் அரசு சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத்தான் தகவல்கள் வருகின்றன
விசிக, இடது சாரிகள்
தமிழ்நாட்டின் நலன் சார்ந்து விஜய் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு, இப்போது கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகளும் விசிகவும் வெளியில் வேண்டுமானால் சில இடைஞ்சல்களை ஏற்படுத்தலாம்.. ஆனால், அவர்கள் அரசை கவிழ்க்கக்கூடிய அந்த எல்லைக்கு ஒருபோதும் செல்ல மாட்டார்கள்.. அந்த எல்லைக்கு சென்றால் அவர்களுக்கு நன்றாகத தெரியும், கவர்மெண்ட் கவிழ்ந்து உடனடி எலக்ஷன் வந்துவிடும் என்று..
இப்போதைய சூழலில் கட்சி தாவல், குதிரை பேரம், புதிய கூட்டணி என எந்த வேலைகளைச் செய்தாலும், இந்தச் சட்டமன்றத்திற்குள் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியும் என்றால் அது தவெகவால் மட்டும்தான் முடியும். விஜய் மட்டும்தான் ஆட்சி அமைக்க முடியும்.. ஸ்டாலினோ அல்லது எடப்பாடியோ, அதாவது திமுகவோ அல்லது அண்ணா திமுகவோ சத்தியமாக ஆட்சி அமைக்க முடியாது.
108 எளிதாக 118-ஐ நெருங்கும்
ஏனெனில், பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பர் 118 ஆகும்.. தற்பொழுது 108 இடங்களை வைத்துள்ள தவெக மட்டும்தான் 118-ஐ எளிதாக நெருங்க முடியும்.. வெறும் 59 சீட் வைத்துள்ள திமுகவோ அல்லது 47 சீட் வைத்துள்ள அண்ணா திமுகவோ 118-ஐ நெருங்க முடியாது..
ஒருவேளை இடதுசாரிகளும் விசிகவும் கோபித்துக் கொண்டு அரசை கவிழ்க்க முயற்சி செய்து, அரசு கவிழ்ந்துவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம்.. அப்படி ஒரு நிலைமை வந்தால், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைத் தவிர வேறு வழியே கிடையாது.. வேறு யாராலும் தற்பொழுது ஆட்சி அமைக்க முடியாது..
பல்லாயிரம் கோடி பணம்
அந்த நிலைமை வந்தது என்றால், திமுகவும் அதிமுகவும் இப்போது வைத்திருக்கும் சீட்டுகளைக் கூட ஜெயிக்க முடியாது.. மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதை பற்றி அண்ணா திமுகவாலோ அல்லது திமுகவாலோ கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது..
ஏனெனில், நடந்து முடிந்த இந்தத் தேர்தலில் திமுக பல ஆயிரம் கோடிகளையும், அண்ணா திமுக சில ஆயிரம் கோடிகளையும் செலவு செய்துள்ளார்கள்.. தேர்தல் முடிந்து 6 மாதத்திற்குள்ளோ அல்லது ஒரு வருடத்திற்குள்ளோ மீண்டும் தேர்தல் வந்தால், அந்த பல்லாயிரம் கோடி பணம் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? இன்னும் 5 ஆண்டுகள் பொறுத்துத் தேர்தல் வந்தால்தான் இவர்களால் தற்பொழுது சமாளிக்க முடியும்.
திமுக தவெக அரசை காப்பாற்றும்
அதனால்தான் சொல்கிறேன், இந்த அரசை கவிழ்க்கக்கூடிய எந்த வேலைகளிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட மாட்டார்கள்.. ஒருவேளை கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடியால் இந்த கவர்மெண்ட் தானாகக் கவழும் சூழல் வந்தால், அதைக் கவிழாமல் காப்பாற்றுவதற்கான எல்லா வேலைகளையும் இந்த 2 எதிர்க்கட்சிகளுமே செய்வார்கள்.
குறிப்பாக திமுகவே முன்னின்று செய்யும்.. கடந்த காலங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் அவையைப் புறக்கணித்து மறைமுகமாக அரசாங்கத்தைக் காப்பாற்றினார்களே, அதுபோன்ற வேலைகளை செய்தாவது விஜய் அரசை காப்பாற்றுவார்கள்.. தேர்தல் வந்தால் அதை சந்திக்கும் பொருளாதாரப் பலமும் செல்வாக்கும் இப்போது தவெகவிடம் மட்டும்தான் இருக்கிறது.
ஒருவேளை தானாகவே இந்த அரசு கவிழும் நிலை வந்தால், விஜய் அரசை இவர்கள் 2 பேரும் சேர்ந்து காப்பாற்றுவார்கள், குறிப்பாக திமுகவே முன்னின்று காப்பாற்றும்.." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications