நடுஇரவில் நடுங்கிய செங்குன்றம்.. கதவை திறந்த மக்கள்! கமிஷனர் அருண் வந்ததும் ட்விஸ்ட்! ஆபரேஷன் டேர்
சென்னை: நேற்று இரவு சென்னை செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். ரவுடிகளை அட்வைஸ் செய்து அடக்கி வைப்பது, தேவை என்றால் சுட்டு பிடிப்பது, மீறிப்போனால் என்கவுண்டர் செய்வதற்கு கூட சென்னை போலீசார் ரெடியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படியே சமீபத்தில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து சில என்கவுண்டர்கள் கூட நடந்தன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் கூட சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ஆபரேஷன் டேர்: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த சென்னையில் கமிஷனர் அருண் மூலம் ஆபரேஷன் டேர்.. அதாவது DARE - துணிச்சல் என்று பெயரில் புதிய போலீஸ் ஆபரேஷன் தொடங்கப்பட்டு உள்ளது. இது என்ன ஆபரேஷன் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி 12 துணை ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் Drive Against Rowdy Elements (DARE) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதிரடி ஆக்சன்: சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் லிஸ்டை அருண் எடுத்துள்ளார். அவர் சென்னை பெருநகரம் முழுவதும் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கே செல்ல முடிவு எடுத்துள்ளார். அங்கே நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஆக்சன்: இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு சென்னை செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. சென்னையில் ரவுடி சேதுபதியை துப்பாக்கி முனையில் பிடித்த காவல்துறை அவரை கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி சேதுபதியை தனிப்படை போலீஸார் செங்குன்றத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
ரவுடி சேதுபதி மீது கொலை, கொள்ளை அடிதடி கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. அவர் அங்கே இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் அங்கே சென்று அவரை பிடிக்க முயன்ற போது.. சேதுபதி தப்பி ஓட முயன்றதால் அவரை சுட்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . இரவில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு சத்தம் காரணமாக மக்கள் கும்பலாக வெளியே வந்து பார்த்தனர்.
ரவுடிகள் பற்றி உத்தரவு: ஏற்கனவே ரவுடியிசத்தை விட விரும்பாத ரவுடிகள் மீது கடுமையான ஆக்சன் எடுக்கப்படும் என்று அருண் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ரவுடிகள் நடவடிக்கை: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications