பொது சிவில் சட்டத்தை நான் ஏற்கிறேன்.. இதை உங்களால் பண்ன முடியுமா? தட தடக்கும் சீமான்
சென்னை: பொது சிவில் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது சிவில் சட்டம் குறித்து தனது பாணியில் பேசியுள்ளார். அது குறித்த விவரத்தை பார்ப்போம்.
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் நாட்டில் பொது சிவில் சட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடியே கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். இரண்டு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்ந்தார்.

பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், பொது சிவில் சட்டத்திற்கு தற்போது என்ன அவசரம் வந்து விட்டது? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், பொது சிவில் சட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொது சிவில் சட்டம் கொண்டு வாங்க... எதையும் கொண்டு வாங்க.. இதுவரைக்கும் இருப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்கு.. குறிப்பாக இஸ்மாலிய, கிறிஸ்தவ மக்களுக்கு இருக்கிற சட்ட முறையை தகர்க்க வேண்டும் என்பதுதான்.. என் சட்டையும் உங்க சட்டையும் ஒரே மாதிரி இருக்கா..
என் சாப்பாடும் உங்க சாப்பாடும் ஒரே மாதிரி இருக்கா... சரி பொது சிவில்சட்டத்தை நான் ஏற்கிறேன். ராணுவத்திற்கு வரும் போது தாடியை எடுக்கிறேன். முடியை ஒட்ட வெட்டிக்கொள்கிறேன். சீக்கியரை தாடியை எடுத்து விட்டு முடியை வெட்டி விட்டு வர சொல்லி விடுவீர்களா நீங்க... சொல்லுங்க.. அப்புறம் பொது சிவில் சட்டம் பற்றி பேசுவோம்.. ஒரே நடைமுறை நாட்டில் எல்லாருக்கும்.. அதை கொண்டு வாங்க.. அதற்கப்புறம் அதைப்பற்றி பேசுவோம்.
விலை வாசி எவ்வளவு இருக்கு... எவ்ளோ பிரச்சினை இருக்கு.. ஒரு அடிப்படை கட்டமைப்பு இல்லை. கல்வியில் இல்லை... போக்குவரத்தில் இல்லை.. மின் உற்பத்தியில் இல்லை... சாலை போடுதல் பரமாரிப்பில் இல்லை.... எதுவும் இல்லை.. லட்சக்கணக்கான பேருக்கு வேலை இல்லை.. நீங்களே சொன்னீங்க ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று.. அப்போ 2 கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
10 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள். இது பற்றி பேசுவதே இல்லை. சரி... பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்துட்டீங்க.. என்ன ஆகிடும். நாடு அப்படியே பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கிடுமோ... வளர்ந்துடுமா.. ஒன்னும் கிடையாது.. முதலில் பெண்களுக்கு சம உரிமை இருக்கா... ஒரே சிவில் சட்டம் கொண்டு வாருங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
கோவிலுக்குள் என்னால் உள்ளே போக முடியுமா? ஒரே குளத்திற்குள் குளிக்க முடியுமா? ஒரே சுடுகாட்டில் புதைக்க முடியுமா? பிறகு எதற்கு ஒரே நாடு, ஒரே சட்டம் என பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.. சட்டத்தின் முன்பு சமம் இல்லை என்று இருக்கும் போது எதற்காக இந்த பொது சிவில் சட்டம்... வேலையில்லாத வேலை" என்று ஆவேசமாக பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications