தேசிய கல்வி கொள்கை vs தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை.. இரண்டிற்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசு இன்று மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது. நாட்டில் ஒரு மாநிலம் தனியாகக் கல்விக் கொள்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். இதற்கிடையே இந்த தேசிய கல்விக் கொள்கைக்கும், மாநில கல்விக் கொள்கைக்கும் இடையே இருக்கும் வேறுபாடு குறித்து நாம் பார்க்கலாம்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தனது சொந்த மாநில கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த புதிய கொள்கையை வெளியிட்டார். முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது.

What is the difference between NEP vs Tamil Nadu s SEP Exams Language and Admissions Explained
Photo Credit:

தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழக மாநில கல்வி கொள்கைக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்.

1. மொழி கொள்கை

தேசிய கல்வி கொள்கை அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி கொள்கையை (தாய் மொழி, ஆங்கிலம், ஒரு பிராந்திய மொழி) பரிந்துரைக்கிறது.

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை இருமொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படும்.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ அல்லது மாநிலப் பாடத்திட்டம் என எதில் படித்தாலும் அனைத்து மாணவர்களும் 10ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். எந்த விதமான மொழித் திணிப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பள்ளித் தேர்வு முறை

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. மாணவர்களின் அறிவு திறனைச் சோதனை செய்யப் பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

மாநில கல்வி கொள்கையில் இந்த வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். 11ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் அழுத்தத்தைக் குறைத்து, கல்வியை வர்த்தக மயமாக்குவதைத் தடுக்கவே இந்த கொள்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. இளங்கலை கல்லூரி படிப்பு

தேசிய கல்விக் கொள்கை இளங்கலை சேர்க்கைகளுக்கு நுழைவுத் தேர்வை ஊக்குவிக்கிறது. கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் கூட நுழைவுத் தேர்வுகளை வலியுறுத்துகிறது.

ஆனால், மாநில கல்விக் கொள்கை இதை முற்றிலும் நிராகரிக்கிறது. இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். எந்த நுழைவுத் தேர்வும் கட்டாயமில்லை.

4. நீட் மற்றும் மத்திய தேர்வுகள்

தேசிய கல்விக் கொள்கை மருத்துவ சேர்க்கைக்கான நீட் போன்ற தேசிய தேர்வுகளை ஆதரிக்கிறது.

ஆனால், தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை நீட்டை கடுமையாக எதிர்க்கிறது.

தமிழ்நாடு அரசு நீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இது மாணவர்கள் மத்தியில் அழுத்தம் மற்றும் ஏற்றத்தாழ்வை உருவாக்குவதாகத் தமிழக அரசு கூறுகிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட்டை ஏற்க மறுத்ததால், தமிழக அரசுக்கு வர வேண்டிய ரூ.2,152 கோடி சர்வ சிக்ஷா திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

5. கல்வி மீதான கட்டுப்பாடு

கல்வியை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீவ் இருக்கும் பொது பட்டியலில் வைத்திருக்க வேண்டும் எனத் தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.

ஆனால், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பதைத் தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரைக்கிறது. இதன் மூலம் கல்வித்துறையில் மாநில அரசுக்கு முழு கட்டுப்பாடு கிடைக்கும்.

6. கல்விக்கான முக்கிய கவனம்:

தேசிய கல்விக் கொள்கை டிஜிட்டல் கற்றல் மற்றும் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஆனால், மாநில கல்விக் கொள்கை அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆங்கில மொழித் திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உலகளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தயார் செய்ய இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. அரசியல் நிலைப்பாடு மற்றும் நிதி அணுகுமுறை

கல்வியில் அரசு- தனியார் இணைந்து செயல்படுவதைத் தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. நாடு முழுக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே பாலிசி வேண்டும் என்பதைத் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

ஆனால், மாநில கல்விக் கொள்கை இதை நிராகரிக்கிறது. மத்திய அரசின் தலையீடுகளை மறுக்கும் மாநில கல்விக் கொள்கை திணிப்பை மறுத்து, அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசே அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. கல்வியை மாநில பட்டியலில் இருக்க வேண்டிய விஷயமாகக் கருதும் தமிழ்நாடு அரசு, தரமான கல்வியை உறுதி செய்யவும், தனியார் துறையை அதிகம் சார்ந்திராமல் இருக்கவும் மாநில அரசுக்கு அதிக அதிகாரங்களைக் கோருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+