"தலைவன் இருக்கிறான் கலங்காதே".. அந்த வார்த்தை.. 5 மணி நேரத்தில் பின்வாங்கிய ஆளுநர் ரவி! திமுக ஹாப்பி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி வெளியிட்ட அறிவிப்பிற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்தன. தொடர்ந்து 5 நாட்களாக தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.

அதன்பின் அமலாக்கத்துறை ரெய்டும் நடந்தது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு அடிப்படையில் ரெய்டுக்கு உள்ளான செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
“இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்” என்ற ஒரே வரியின் வீரியத்தை பாருங்கள்
— Saravanan Annadurai (@saravofcl) June 29, 2023
இந்தியா முழுதும் பரபரத்தது, என்ன செய்வோம் என எதிர்பார்த்தது!
மிகப்பெரிய அரசியல் வெற்றியை ஈட்டிக்காட்டியிருக்கிறார் நம் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் #MKStalin #பாஜகபரிதாபங்கள் pic.twitter.com/sUr3FldbDI
இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து சட்ட ரீதியாக அவரை எதிர்கொள்வோம் என்று ஆளும் திமுக அறிவித்தது. முதல்வர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அறிவித்தார். இந்த நிலையில் 5 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை ஆளுநர் ஆர். என் ரவி மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார்.
தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .
பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடிய ஆளுநர்.
— Saravanan Annadurai (@saravofcl) June 29, 2023
ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!! #MKStalin 🔥🔥🔥 pic.twitter.com/21IOjunj3O
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாகவும், பின்னர் நீக்கவில்லை என்றும் ஆளுநர் ஆர். என் ரவி வெளியிட்ட அறிவிப்பிற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்" என்ற ஒரே வரியின் வீரியத்தை பாருங்கள் இந்தியா முழுதும் பரபரத்தது, என்ன செய்வோம் என எதிர்பார்த்தது!
மிகப்பெரிய அரசியல் வெற்றியை ஈட்டிக்காட்டியிருக்கிறார் நம் தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர். குடியரசுத்தலைவர் நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மணிப்பூர் கலவரத்தை சரியான முறையில் கையாளவில்லை என பதவி நீக்கம் செய்து உத்திரவிட்டால் ஏற்றுக்கொள்ளுமா பாஜக??? பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடிய ஆளுநர். ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!!, என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications