சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Cyclone Nivar-இன் அர்த்தம் என்ன? பெயருக்கேற்ப சமர்த்தாக இருக்குமா?.. இல்லை ருத்ரதாண்டவம் ஆடுமா?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கும் நிவர் புயலின் அர்த்தம் என்ன தெரியுமா? அது பெயருக்கேற்ப நடந்து கொள்ளுமா இல்லை ருத்ரதாண்டவம் ஆடுமா என்பது போக போகத் தான் தெரியும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இது சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலோர மாவட்டங்களில் வருவாய் துறையினரும் பேரிடர் மீட்பு துறையினரும் உஷார் நிலையில் உள்ளனர். இந்த புயல் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

புயலுக்கு பெயர்

புயலுக்கு பெயர்

இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாடும் ஒரு பெயரை பரிந்துரைத்து வைத்திருப்பர். அந்த வரிசையின் படி புயலுக்கு பெயர் வைப்பது வழக்கம் ஆகும்.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

இந்த பெயருக்கு நல்ல அர்த்தங்களும் உள்ளன. சில புயல்கள் பெயருக்கேற்ப செயல்படும். சில புயல்கள் பெயரின் அர்த்தத்திற்கும் அதன் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் நடந்து கொள்ளும். அந்த வகையில் நிவரின் அர்த்தம் தற்காப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை என்பதாகும்.

மழை

மழை

இந்த பெயரை சூட்டியது ஈரான் நாடாகும். இந்த புயலின் வேகம் குறைவாக உள்ளதால் கஜா போலவோ அல்லது வர்தா போன்றோ அதிக சேதத்தை உண்டாக்காமல் சென்றுவிடும் என கருதப்படுகிறது. மழையை மட்டும் கொடுத்துவிட்டு செல்லலாம்.

சேதம்

சேதம்

இது தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எதுவாக இருந்தாலும் இந்த புயல் பெயரின் அர்த்தத்திற்கேற்ப நம்மை தற்காக்கிறதா இல்லை சேதத்தை ஏற்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
What is the meaning for Cyclone Nivar? Who coined the name Nivar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X