கரெக்டா சொல்லிருக்கு தாய்லாந்து.. 10 பொருத்தமும் பக்காவா பொருந்துது.. அம்பன் புயல் அர்த்தம் இதுதான்
சென்னை: மேற்கு வங்கத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது அம்பன்/ஆம்பன் புயல் (amphan cyclone). கடல் அலை பல அடி உயரத்திற்கு எழும்பி விளாசி கொண்டு இருக்கிறது.. பல லட்சம் மக்கள் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் இருந்து நிவாரணம் முகாம்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
Recommended Video
புயல் கரையை கடக்கும்போது சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
10 சூறாவளிக்கு இணையானது இந்த அம்பன் புயல் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இப்படியாக மொத்த இந்தியாவையும் அச்சமூட்டி வருகிறது இந்த அம்பன் என்ற பெயர்.

பெயர் சூட்டுதல்
அப்படியானால் அந்தப் புயலின் பெயருக்கு அர்த்தம் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். முதலில் இந்தப் பெயரை சூட்டியது யார் என்று பார்ப்போம். பொதுவாக, இந்தியா, வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை, தாய்லாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள், தெற்காசிய பிராந்தியத்தில் உருவாகக்கூடிய புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கூட்டாக இணைந்து மேற்கொள்கின்றன. 2018 ஆம் ஆண்டு, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய மேலும் 5 நாடுகளும் இதில் கூட்டாளியாக மாற்றப்பட்டன.

2004ம் ஆண்டு உருவாக்கிய பெயர்
2004ஆம் ஆண்டு அப்போதைய உறுப்பு நாடுகள் அனைத்தும் இணைந்து ஆளுக்கு தலா எட்டு பெயர்களை.. ஆக மொத்தம் 64 பெயர்களை உருவாக்கின.
ஒவ்வொரு முறை புயல் உருவாகும் போதும், இதிலிருந்து ஒரு பெயரை சூட்டிக் கொள்வது வழக்கம். அந்த அடிப்படையில் அம்பன் என்பது தாய்லாந்து நாடு அப்போது கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் இப்போது சூட்டப்பட்டிருக்கும் பெயராகும்.

பெயர் சூட்டல் நடைமுறைகள்
இதுபோல பெயர் சூட்டப்படும் போது, பாலினம், அரசியல், மதம் அல்லது கலாச்சார தன்மை உடையதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. மிக மோசமான பெயராகவும் இருந்துவிடக்கூடாது. சுருக்கமாக இருக்கவேண்டும். எளிதாக அனைத்து நாட்டு மக்களாலும் எச்சரிக்கும் வகையில் இருக்கவேண்டும். அதிகபட்சம் 8 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்றவை நிபந்தனை.

அம்பன் பெயர் காரணம்
இப்போது மேட்டருக்கு வருவோம். அம்பன் என்றால் என்ன அர்த்தம்? (meaning of amphan) தாய்லாந்து மொழியில் இது உம்பன் (Um-pun) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அர்த்தம் ஆகாயம் அல்லது வானம் (SKY) என்பதாகும். வானத்திலிருந்து மழையை தோற்றுவிக்கும் என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மட்டுமின்றி, வங்கதேச நாட்டிலும், மழை பெய்வித்து, மக்களை, வானம் பார்க்க வைத்துள்ள இந்த புயலுக்கு, இப்பெயர் ஏற்புடையதுதான்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications