Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமுதா ஐஏஎஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன.. எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக தவெகவினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டரான பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Edappadi Palaniswami Amudha IAS

இந்நிலையில் தவெகவினர் கரூர் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக குற்றம்சாட்டி வந்தார்கள். அதே டோனில் தான் தவெக தலைவர் விஜய்யும் இன்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருந்தார். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை.. , உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த விஜய், கரூருக்கு நேரில் வருவேன் என்று கூறினார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிப்படையாக சவால் விட்டார்.

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் தமிழக அரசு தரப்பில் அமுதா ஐஏஎஸ், காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது "கரூர் பிரச்சாரத்துக்கு விஜய்யின் தவெக தரப்பிலிருந்து 7 இடங்களை காட்டினார்கள். அவர்கள் கேட்ட இடங்களில் ஒன்றின் அருகே கால்வாய் மற்றும் பெட்ரோல் பங்க் இருந்தது. எனவே அந்த இடம் ஒதுக்கப்படவில்லை. அவர்கள் கேட்ட இடங்களில் வேலுச்சாமிபுரமும் இருந்தது. அதைத்தான் நாங்கள் ஒதுக்கினோம்.

Edappadi Palaniswami Amudha IAS

மேலும், தவெகவினர் கொடுத்த கோரிக்கை மனுவிலேயே 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்களாகவே கூடுதல் நபர்கள் வரலாம் என்பதால் வேலுசாமிபுரத்தை ஒதுக்கினோம். காவல் துறை பாதுகாப்பை பொறுத்தவரை 50 பேருக்கு 1 போலீஸ் என்பதுதான் பொதுக்கூட்ட பந்தோபஸ்து விதி. 10,000 பேருக்கு 500 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கூட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தினர் என்பது தவறு. தவெக தலைவரின் வாகனம் வரும்போது, ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம் கூட்டத்தை போலீஸார் விலக்கிவிட்டார்கள்.

கூட்டம் நடந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. அதற்கான வீடியோ சான்றுகளும் உள்ளன. கூட்ட நெரிசல் அதிகமாகும்போது தவெகவினர் அமைத்திருந்த ஜெனரேட்டர் அறைக்குள் கூட்டம் புகவே அங்கு ஜென் செட் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மின் விநியோகம் இருப்பதை வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் விளக்கத்திற்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் கூறுகையில், " கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன? இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா?

ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான்.மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+