Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த முறை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க.. எடப்பாடியை திணற வைத்த "நம்பர் 5".. அமித் ஷா வைத்த டிமாண்ட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக 5 இடங்களை வாங்கிக்கொண்டு பாஜக அமைதியாக இருக்காது, இந்த முறை அதிமுகவிடம் பாஜக கூடுதல் இடங்களை கேட்கும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது.

What is the number 5 demand from Amit Shah to Edappadi Palanisamy in Delhi meeting?

அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இவர்கள் மூவரும் நடந்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வரிசையாக தேர்தல்களில் தோற்று வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார், சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டார் என்று வரிசையாக தோல்வி அடைந்து வருகிறார்.

இதை காரணம் காட்டி அவரிடம் கூடுதல் இடங்களை கேட்டு உள்ளனர். அந்த மீட்டிங்கில் அமித் ஷா சார்பாக கூடுதல் இடங்கள் கேட்கப்பட்டு உள்ளது. ஆனால் பாஜகவும் வலிமை இன்றிதான் இருக்கிறது. அதனால் கூடுதல் இடங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்று எடப்பாடி கூறி இருக்கிறார்.

உங்கள் கட்சி ஏற்கனவே பல கட்டமாக பிரிந்து கிடக்கின்றன. உங்க கட்சியில் வாக்குகள் பிரியும். அதனால் எங்களுக்கு கூடுதல் இடங்களை கொடுங்கள். நாங்கள் அங்கே வென்று காட்டுகிறோம். உங்களுக்கு தெற்கு மண்டலத்தில் பலமே இல்லை.

யதார்த்தமாக என்ன சூழ்நிலை இருக்கிறதோ.. பிராக்டிகலாக என்ன சூழ்நிலை இருக்கிறதோ அதை வைத்து இடங்களை முடிவு செய்வோம். ஒற்றை தலைமை இருந்தாலும் இப்போது ஓபிஎஸ் இல்லை, மக்கள் செல்வாக்கு இல்லை. உங்களுக்கு செல்வாக்கு இல்லை.

பாஜக இல்லை என்றால் கொங்கு மண்டலத்திலேயே நீங்கள் வென்று இருக்க முடியாது. பாஜகவிற்கு அதிமுக முக்கியம். அதிமுகவிற்கு பாஜக முக்கியம். அதனால் தென் மண்டலத்தில் கூடுதல் இடத்தில் போட்டியிடுவது குறித்து இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

தெற்கில் கூடுதல் இடங்களில் போட்டியிட.. குறைந்தது மேற்கு மற்றும் தெற்கில் 9 இடங்களில் போட்டியிட பாஜக கேட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் வாக்கு வங்கி பிரிந்து கிடக்கிறது. ஓபிஎஸ் இல்லை, டிடிவி தினகரன் இல்லை, சசிகலா இல்லை என்று எல்லோரும் பிரிந்து கிடக்கிறார்கள்.

இதுவரையிலான தேர்தலில் எடப்பாடி வெற்றிபெறவில்லை. எதிலும் எடப்பாடி தன்னை நிரூபிக்கவில்லை. அதனால் பாஜக கூடுதல் இடங்களை கேட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு நடக்கும். அப்படியே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கும்.

பாஜக கடந்த முறை 5 இடங்களை பெற்றுக்கொண்டு அமைதியாக இருந்தது. இந்த முறை 5 இடங்களோடு நிற்காது. கூடுதல் இடங்களை பாஜக கேட்கும். 5க்கு மேல் கேட்கும். பெரும்பாலும் 10 இடங்களை கேட்க பாஜக முயலும்.

அதனால் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது கண்டிப்பாக பிரச்சனை ஏற்படும். அப்போது என்ன நடக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். இப்போதைக்கு அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கூட்டணி பற்றி பின்னர் முடிவு எடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

அதிமுக நீங்கதான் என்ற விஷயத்திற்கு பாதிப்பு வராது என்று எடப்பாடிக்கு டெல்லி உறுதி அளித்து உள்ளது. அதனால் ஓபிஎஸ் இனி அதிமுகவிற்கு வருவது சிக்கல்தான். நேற்று எல்லா பிரச்சனையும் முடிந்துவிட்டது.

இன்னும் 6- 7 மாதங்கள் உள்ளன. அதனால் மீண்டும் பிரச்சனை வரலாம். அண்ணாமலை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடக்க வேண்டும். பாஜக மேலிடமோ.. சீட் எல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம். கூட்டணி பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். பாஜகவை பலப்படுத்துவதை பற்றி நீங்கள் யோசிங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது, என்று கூறி உள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+