சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

EXCLUSIVE: "இருங்க வரேன்".. சசிகலாவின் திடீர் முடிவு.. என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி..?

எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தர உள்ளாராம் சசிகலா

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக மேலிடத்துக்கு கலக்கம் தரும் வகையில் ஒரு செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது..!

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள், வருகிற 17-ந்தேதி விமர்சையாக கொண்டாட அதிமுக தயாராகி வருகிறது..

அதிமுகவுக்கு ஆள்பிடிப்பு! ராமதாஸை சீண்டும் எடப்பாடி பழனிசாமி? ரசிக்கும் திமுக! அதிமுகவுக்கு ஆள்பிடிப்பு! ராமதாஸை சீண்டும் எடப்பாடி பழனிசாமி? ரசிக்கும் திமுக!

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கட்சி அலுவலகத்துக்கு வரஉள்ளனர்.. அதிமுக அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் மரியாதை செலுத்துகிறார்கள்..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்படிப்பட்ட சூழலில், எம்ஜிஆர் பிறந்த நாளில் சசிகலா வெளியே வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், கொரோனா கெடுபிடிகள் இருப்பதால், எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளியே வருவதை தவிர்க்க நினைத்திருக்கிறாராம் சசிகலா... அதுமட்டுமல்ல, வெளியில் வரமாட்டேன் என்றும் கூட தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துவிட்டாராம்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எனினும், அவரது நிர்வாகிகள் தான் இதை ஏற்கவில்லையாம்.. அதிமுக தலைவர்கள், கட்சி அலுவலகத்துக்கு செல்லவிருப்பதால், "எம்ஜிஆர் பிறந்தநாளில் நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தால் கழக தொண்டர்களிடம் ஒருவித சோர்வு வந்துவிடும்... ஓபிஎஸ்சுக்கும் இபிஎஸ்சுக்கும் நீங்கள் கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் அம்மா... அதனால் நீங்கள் வெளியே வரணும் அம்மா" என்ற ரீதியில் சசிகலாவிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

சசிகலா

சசிகலா

இதனையடுத்து, தன்னுடைய முடிவை சசிகலா மாற்றி கொண்டுள்ளதாக தெரிகிறது. எம்ஜிஆர் பிறந்த நாளில் சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு 17- ந்தேதி காலை 10 மணிக்கு வர போகிறார் சசிகலா... எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்த போகிறார்.. இந்த நிகழ்ச்சியை பரபரப்பாக்க தொண்டர்களை திரட்டும் திட்டத்தில் இருக்கிறாராம்.. இப்படித்தான் தேவர் ஜெயந்தியின் போதும் சசிகலா தரப்பு பக்காவாக பிளான் செய்தது.

Recommended Video

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
     எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி

    வழக்கமாக பசும்பொன்னுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, கடந்த முறை செல்லவில்லை.. ஓபிஎஸ்ஸும் தவிர்த்துவிட்டார்.. ஆனால், சசிகலா மட்டும் நிர்வாகிகளுடன் சென்று தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பித்திருந்தார்.. இது சோர்வுற்றிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், தென்மண்டல நிர்வாகிகளுக்கும் தெம்பை ஏற்படுத்தியிருந்தது.. அந்த வகையில், அதிமுக மேலிடத்துக்கே ஜெர்க் தரும் வகையில், சசிகலாவின் அடுத்த விசிட் இருக்க போவதாக சொல்கிறார்கள்.. இதை அதிமுக இரட்டை தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    What is the politics of Edapadi Palanisamy against Sasikala and Will she go to MGR memorial House
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X