இனி தங்கம் வாங்க துபாய்க்கு போக வேண்டாம்! இருக்கவே இருக்கு பூடான்! போய் அள்ளுங்க! ஒரு கண்டிஷன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் வாங்க துபாய், ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பூடானுக்கு சென்றால் போதும் குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி வரலாம் என பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லோராலும் பூடான் போக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போக முடிந்தவர்கள் போய் வாங்கி வரலாம் என்கிறார்கள்.

தங்கத்தின் விலை சவரன் நம் தாத்தா பாட்டி காலத்தில் ரூ 50 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நம் காலத்தில் ரூ 2000 , ரூ 5000, ரூ 10 ஆயிரம் என உயர்ந்து தற்போது ரூ 58 ஆயிரத்தில் நிற்கிறது. பொதுவாக தங்கத்தை மக்கள் வாங்க காரணம், அணிவதற்காக இருந்தாலும் மற்றொரு காரணம் அது ஒரு முதலீடு!

gold rate gold price

10 ரூபாய் சம்பாதித்தால் 1 ரூபாயாவது சேமிக்க வேண்டும். அது போல்தான் சிலர் சேமித்து வைக்கிறார்கள். அது போல்தான் தங்கத்தின் மீதான இன்றைய முதலீடு என்பது நாளைய சேமிப்பு. வீடு, நிலம் வாங்க முடியாதவர்கள் தங்கத்தின் மீது தங்கள் முதலீட்டை செலுத்துகிறார்கள். சென்னையில் இன்றைய நிலைக்கு தங்கத்தின் விலையானது ரூ 60 ஆயிரம் வரை தொட்டுவிட்டு தற்போது 58 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது. இதனால் நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற நிலையில் பங்கு சந்தையில் முன்னேற்றம் எழுந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த விலை குறைவு மேலும் சரியும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஒருவர் பிஹைண்ட்வுட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்க, துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. பூடானுக்கு சென்றால் 10 கிராம் தங்கத்தை ரூ 20 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது நம் ஊரில் தங்கம் விலை 60 ஆயிரம் (10 கிராம்) என்றால் அங்கு ரூ 40 ஆயிரத்திற்கு கிடைக்கும். இது போன்ற பெரிய வித்தியாசங்கள் மற்ற நாடுகளில் இல்லை.

இந்த தங்கத்தை வாங்க சில நிபந்தனைகளை பூடான் அரசு வைத்துள்ளது. அதாவது sustainable development fee என வைத்திருக்கிறார்கள். அது சுமாராக ரூ 2000 செலுத்த வேண்டியிருக்கும். அது போல் அரசு அங்கீகரித்த ஹோட்டல் இருக்கும். அதில் ஒரு இரவாவது தங்கியிருக்க வேண்டும். மேலும் பூடானில் தங்கத்தை இந்திய கரன்சியில் வாங்க முடியாது. அமெரிக்க டாலரில்தான் வாங்க முடியும்.

20 ஆயிரம் விலை குறைவுக்காக யாராவது பூடானுக்கு போய் தங்கத்தை வாங்குவார்களா என்பது தெரியவில்லை. நிறைய கிராம்கள் வாங்க வேண்டியவர்கள் சென்று வாங்கிக் கொள்ளலாம். ஒரே தங்கம்தான் ஆனால் நாடுக்கு நாடு விலையில் வித்தியாசப்படுவதற்கு காரணம் அந்த நாடு தங்கத்தின் மீது விதிக்கும் வரிதான் என தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் துபாய், ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் மக்கள் இங்கு வாங்கும் நகையை அப்படியே மாற்றி, அதை விட கூடுதலாக கிராமில் புதிய நகை வாங்கிக் கொள்வர். இதற்காகவே ஆண்கள் 20 கிராம் வரையும் பெண்கள் 40 கிராம் வரையிலும் தங்கத்தை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பலர் பயனடைந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+