சூர்யாதேவி மண்டையில் தையல்.. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் என்ன சொன்னாரு தெரியும்ல? இப்போ சிக்கிட்டாரு
சென்னை: 2020 ஆம் ஆண்டு டிக்டாக் பிரபலம் சூர்யா தேவியை அவதூறாக பேசியது குறித்து நாஞ்சில் விஜயன் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய பழைய பிளாஸ்பேக்குகள் வைரலாகி வருகின்றன.
நடிகை வனிதா விஜயகுமார் சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப யூடியூப் சேனலை தொடங்கினார். இந்த சேனலுக்கு எடிட்டிங் வேலை செய்தவர்தான் பீட்டர் பால். இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஆனால் பீட்டல் பால் தனது மனைவியை விவாகரத்து செய்து கொள்ளவில்லை. இதை அறியாமல் லாக்டவுனில் வீட்டிலேயே பீட்டர் பாலை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்.

பீட்டர் பால்
இது தொடர்பாக பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் வனிதா- பீட்டருக்கு எதிராக வளசரவாக்கம் போலீஸில் புகார் செய்தார். இது ஒருபுறம் நடக்க, வனிதாவுக்கு எதிராக தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேட்டி அளித்து வந்தனர். தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகன் இருக்கும் போது விவாகரத்தே செய்யாத ஒருவரை வனிதா எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கேள்வி எழுந்தது.

டிக்டாக் பிரபலம்
இவர்களை போல் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவியும் வனிதா விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும் வனிதா வசிக்கும் அபார்ட்மென்ட்டுக்கு சென்று வீடியோ எடுத்து நான் உன் வீட்டு வாசலில்தான் இருக்கிறேன், முடிந்தால் வா என வனிதாவை சூர்யாதேவி ஒருமையில் விமர்சித்தார். சூர்யாதேவிக்கு இரு குழந்தைகள் இருப்பதால் புகார் ஏதும் கொடுக்காமல் இருந்ததாக வனிதா கூறியிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் சூர்யாதேவியின் ஆபாச வசைகளை பொறுக்க முடியாமல் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சூர்யா தேவி
அங்கு சூர்யாதேவியை போலீஸார் அழைத்து வந்து அடுத்த நாள் அனுப்பியதாக அவரே தனது வீடியோவில் தெரிவித்திருந்தார். "என் வீட்டுக்கு வந்த காவல் துறையினர் என்னிடம் விசாரிக்க வேண்டும் என்றுதான் அழைத்தார்கள். அதனால் குழந்தைகளை விட்டுவிட்டு நான் சென்றேன். ஆனால் என்னை வீட்டுக்கு அனுப்பவே இல்லை. நான் மாதவிடாய் காலத்தில் இருந்தேன். பேட் மாற்றுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை" என கடும் குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருந்தார் சூர்யா தேவி.

வனிதா விஜயகுமார்
இந்த நிலையில்தான் வனிதா விஜயகுமார் தனது வழக்கறிஞருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சூர்யாதேவி ஒரு கஞ்சா வியாபாரி. அவர் மீது நிறைய வழக்குகள் உள்ளன. அவர் இரு முறை விவாகரத்து பெற்றவர். அவர் வீட்டில் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என கூறிய வனிதாவும் வழக்கறிஞரும், சூர்யா தேவியும் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்டினர்.

நாஞ்சில் விஜயனுடன் நெருக்கம்
ஒரு புகைப்படத்தில் நாஞ்சில் விஜயன் கையில் பாட்டிலுடனும் சூர்யா தேவி அவருடன் நெருக்கமாகவும் நின்றிருந்த புகைப்படங்கள் வைரலாகின. இதையடுத்து நானும் நாஞ்சிலும் நண்பர்கள், எங்களுக்குள் எந்த தகாத உறவும் இல்லை என்றும் சூர்யாதேவி கூறியிருந்தார். இந்த நிலையில் திடீரென தனது வீடியோக்களில் சூர்யாதேவியை தவறாகவும் வனிதா விஜயகுமாரை ஆதரித்தும் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படங்களை நாஞ்சில் விஜயன்தான் கொடுத்தார் என கருதிய சூர்யாதேவி, தனது யூடியூப் லைவில் நாஞ்சில் விஜயனை கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டூடியோ
நாஞ்சில் விஜயன் தனது வீட்டிலேயே ஸ்டூடியோ வைத்துள்ளதால் அங்கு தனது யூடியூபுக்கான ஷூட்டிங்குகளை எடுப்பார். அவ்வாறு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு சூர்யாதேவி, நாஞ்சில் விஜயனின் வீட்டிற்கு 3 ரவுடிகளை அனுப்பினாராம். அவர்கள் மூவரும் நாஞ்சில் விஜயன், நடிகை சீபா உள்ளிட்டோரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பொருட்களை உடைத்து, நாஞ்சில் விஜயனை அரை நிர்வாணமாக தெருமுனை வரை அந்த 3 ரவுடிகளும் ஓடவிட்டனராம்.

ஸ்டான்லி மருத்துவமனை
இதனால் காயமடைந்த நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த நாள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சூர்யா தேவி குறித்து நாஞ்சில் விஜயன் புகார் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் விஜயன், சூர்யாதேவிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்ததாகவும், அவர் மூலம் கரு உண்டான நிலையில் அதை சூர்யா தேவி கலைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

நெருக்கமான புகைப்படம்
மேலும் சூர்யாதேவியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் சூர்யா தேவி தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்த பதிவை டேக் வைத்திருந்தார். அதில் டேய் நாஞ்சில் விஜயன், என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன், லைவ்வில் வருகிறேன் என கூறி தனது மண்டையில் தையல் போட்ட புகைப்படத்துடன் சேர்த்து இரு புகைப்படங்களை சூர்யாதேவி வெளியிட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்த நாஞ்சில் விஜயன், பாப்பா மண்டைல யாரோ கேக் கட்டிங் பண்ணியிருக்காங்க போல என கிண்டலாக தெரிவித்திருந்தார். சூர்யாதேவியை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டது இந்த புகைப்பட சம்பவமாக இருக்கலாம் என தெரிகிறது.
-
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications