சாம்சங் தொழிலாளர் போராட்டம்! என்ன தான் நடக்கிறது? துணை முதல்வர் உதயநிதி தந்த முக்கிய பதில்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இதற்கிடையே சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் என்ன நடக்கிறது.. தொழிலாளர்கள் கோரிக்கை எந்தளவுக்கு ஏற்கப்பட்டுள்ளது என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் ஒரு மாதமாக பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோரிக்கை ஏற்பு: தொழிலாளர்கள் 16 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாகக் கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் தீவிரமடைந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தையை நடத்தியது. அதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி வசதி, போனஸ் என 15 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகத் தெரிகிறது. சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைக்கும் கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைக்க அனுமதி தரும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசாரை தள்ளிவிட்டதாகச் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் நேற்று காலை கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி உண்டு எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவர்களைச் சிறையில் அடைக்க மறுத்ததால் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டம்: தற்போதுள்ள சூழலில் சாம்சங் ஊழியர்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிடுவது போலத் தெரியவில்லை. இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்களான கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் சாம்சங் தொழிலாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சூழலில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து துணை முதல்வர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார்: இது தொடர்பாகப் பேசிய அவர், "சாம்சங் நிறுவனம் என்பது பல நாடுகளில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம். அவர்களுக்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கத்திற்கு அனுமதி இல்லை என்று அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள். தொழிலாளர்கள் முன்வைத்த ஒரு கோரிக்கையைத் தவிர அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தில் அரசியல் சார்ந்து எதுவும் இருக்கக் கூடாது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த ஒரு கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லை.. தொழிலாளர்களின் இந்த ஒரு கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications