30 மாவட்டங்கள்.. 20 செமீ.. 24 மணி நேரத்தில் புதிய ரெக்கார்ட்.. சென்னையில் அந்த 2 ஏரியாதான் ஹைலைட்!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 20 செமீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் கனமழை பதிவாகி உள்ளது.
வங்கக் கடலில் உருவாகி இருந்து காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக வலுவடைந்து வருகிறது. தற்போது இது ஆழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகு நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இது போக இன்று சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும்.

சென்னை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 20 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் திரு.வி.க நகர் மண்டலத்தில் 10 செமீ மழை பெய்து உள்ளது. அதேபோல் ராயபுரம் மண்டலத்தில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தேனமப்ட்டேய் மண்டலத்தில் 9.8 செமீ மழை பதிவாகி உள்ளது. வானகரத்தில் 9.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

பகுதி வாரியாக பார்த்தால்,
சிடி மருத்துவமனை தொண்டைப்பேட்டை 59.00
அம்பத்தூர் 57.00
அயனாவரம் தாலுகா அலுவலகம் 50.40
டிஜிபி அலுவலகம் சென்னை 42.80
கலெக்டரேட் கட்டிடம் 41.40
அண்ணா பல்கலைக்கழகம் 38.20
ஆலந்தூர் 34.40
சென்னை நுங்கம்பாக்கம் 31.80
பெரம்பூர் கார்ப்பரேஷன் பார்க் 29.50
சோழிங்கநல்லூர் 26.20
அரசு ஹெச்எஸ் பள்ளி எம்ஜிஆர் நகர் 24.60 மிமீ மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு,
மாமல்லபுரம் பொதுப்பணித்துறை பங்களா 65.20
செய்யூர் 30.00
தாம்பரம் தாலுகா அலுவலகம் 28.60
திருப்போரூர் தாலுகா அலுவலகம் 24.10
செங்கல்பட்டு 21.50
கேளம்பாக்கம் 18.80
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் 18.50
மதுராந்தகம் தாலுகா அலுவலகம் 14.00 மிமீ மழை வைத்துள்ளது.

காஞ்சிபுரம்
தாலுகா அலுவலகம், குன்றத்தூர் 43.00
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் 37.40
செம்பரம்பாக்கம் 31.20
ஸ்ரீபெரும்புதூர் 29.20
உத்திரமேரூர் 27.00
வாலாஜாபாத் 6.40 மழை வைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு
பொன்னேரி 69.00
சோழவரம் 61.00
ரெட்ஹில்ஸ் 54.00
ஜமீன் கொரட்டூர் 47.00
தாமரைப்பாக்கம் 47.00
ஆவடி 45.00
பூந்தமல்லி 39.00
திருவள்ளூர் 36.00
ஊத்துக்கோட்டை 36.00
கும்மிடிப்பூண்டி 32.00
பூண்டி 31.00
திருவாலங்காடு 21.00
திருத்தணி 13.00
பள்ளிப்பட்டு 12.00
ஆர்.கே.பேட்டை 5.00 மிமீ மழை பெய்துள்ளது.

நீர் நிலைகள்
கனமழை காரணமாக புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டும் உபரிநீரின் அளவு 100 கன அடியில் இருந்து மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருக்கும் நீர் நிலைகள் எல்லாம் கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றுவது முடிவெடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக வேகமாக ஏரிகள் நிரம்பி வருகின்றன. 29 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் அந்த ஏரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications