சென்னையில் இனி 60 கிமீ வேகத்துக்கு மேல் வாகனம் ஓட்டக்கூடாது! உத்தரவுக்கு நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன
சென்னை: சென்னையில் நவம்பர் 4ம் தேதி முதல் வாகனங்களை எந்த வேகத்தில் ஓட்டம் வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி அதிகபட்ச வேகம் என்பது 60 கிமீ தான். டூவீலர் என்றால் 50 கிமீ வேகத்துக்கு மேல் ஓட்டக்கூடாது. இந்நிலையில் தான் இந்த உத்தரவு தொடர்பாக நெட்டிசன்களின் ரியாக்சன் வருமாறு:
சென்னையில் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் மக்கள் காயமடைவதோடு, சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன.

இதனை தடுக்கும் வகையில் தான் சென்னையில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதற்கான வேக வரம்பு புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் 4ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
அதன்படி சென்னையில் வாகனங்களின் அதிகபட்ச வேகம் என்பது 60 கிமீட்டராக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் வாரியாக பார்த்தால் சென்னையில் இலகுரக வாகனங்கள் 60 கிலோமீட்டர் வேகத்திலும், கனரக வாகனங்கள் அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும்.
இருசக்கர வாகனங்கள் என்றால் அதிகபட்ச வேகம் 50 கிமீட்டர் வேகத்திலும், ஆட்டோக்கள் என்றால் அதிகபட்சமாக 40 கிமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். அதோடு குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் அதிகபட்சம் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என சென்னை மாநாகர போக்குவரத்து போலீசார் இன்று அறிவித்துள்ளனர்.

இதுபற்றி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் எக்ஸ் பக்கத்தில் ட்வீட்டாக வெளியிட்டு இருந்தனர். இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த புதிய உத்தரவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களின் பாராட்டுகளை தமிழக அரசுக்கும், சென்னை போக்குவரத்து போலீசாருக்கும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நெட்டிசன்கள் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்தாவது:
இதுபற்றி ‛பாரத்' என்ற பயனாளர், ‛‛வர இருக்கும் மழைக்காலத்தில் இது ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். இந்த அளவில் மட்டுமே அதிவேகமாக பயணிக்க கட்டுப்பாடு விதித்த விடியல் அரசுக்கு (திமுக அரசு) பாராட்டுகள். இதனால் போக்குவரத்து நெரிசல் இருக்காது'' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆதி என்ற பயனாளர், ‛‛ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் சார். தெருவில் குழந்தைகளை கூட்டிட்டு போக முடியாமல் சர் புர்னு பயம் காட்டுவார்கள். இனி குழந்தைகளை நிம்மதியாக தெருவில் கூட்டிட்டு போகலாம்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷப் என்பவர், ‛‛இது ஒரு நல்ல முடிவு. பாராட்டுகள். இதனை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார். அதேபோல், பாலாஜி என்பவர், ‛‛அனைத்து டிராபிக் சிக்னல்களிலும் இதுபற்றிய நோட்டீஸ் பலகை வைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications