பொன்முடி வழக்கில் உண்மையில் உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? தீர்ப்பு, தண்டனை இரண்டும் ரத்தா?
சென்னை; சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான க.பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.
நீதிபதி ஏ.எஸ் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கில் அவரது மனைவி பி.விசாலாக்ஷியின் தீர்ப்பு மற்றும் தண்டனையையும் ஓகா நிறுத்தி வைத்தார். பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.

நேற்று இந்த வழக்கில் உத்தரவு வந்த போது மூன்றாண்டு சிறைத் தண்டனையை மட்டுமே உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததாக செய்திகள் வந்தன. மாறாக பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் உண்மையில் தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
உண்மையான தீர்ப்பு: அதன்படி பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது. இருவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். தமிழக அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் ஆஜரானார்.
உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பு: கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என்று கூறி.. அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடியும் மனைவி விசாலாட்சி, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கை கூப்பி கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம் என நீதிபதி தெரிவித்தார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏவாக பதவி வைக்கும் தகுதியை இழந்துவிட்டார்.
உச்ச நீதிமன்றம்: இந்த நிலையில் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான க.பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட குற்றவாளி என்ற தீர்ப்பு மற்றும் மூன்றாண்டு சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்தது.
வழக்கு பின்னணி; கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். இதில்தான் தற்போது பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications