குகேஷுக்கு ரூ.5 கோடி.. ஆனா கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு மட்டும் ரூ.25 லட்சம்.. ஏன்? உண்மை காரணம்!
சென்னை: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷுக்கு தலா ரூ 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையை தமிழ்நாடு அரசு வழங்கிய நிலையில் கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு குறைவாக தொகை வழங்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வட்டார தகவல்கள் விளக்கங்களை அளித்துள்ளன.
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் 2025, இந்திய ஆண்கள் அணியும் இந்திய மகளிர் அணியும் பைனலில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்று சாதனை படைத்தன. இதில் மகளிர் அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணி தங்கம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். அது போல் ஆண்கள் அணியில் திருவாரூரை சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸும் சிறப்பாக தனது விளையாட்டை வெளிப்படுத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், கண்ணகி நகர் கார்த்திகா. கடந்த சில நாட்களாக தமிழ்நாடு பெருமிதத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் பெயர். பஹ்ரைனில் நடைபெற்ற 3-ஆவது Asian Youth Games மகளிர் கபடி போட்டியில் சாதித்துவிட்டு இன்று தாயகம் திரும்பி இருக்கிறார்.
கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வெல்ல முக்கியப் பங்காற்றிய தங்கையின் திறமையைப் பாராட்டி முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சத்தை உயரிய ஊக்கத் தொகையாக இன்று வழங்கினார்கள். கபடி ஆட்டத்தில் புயல் போன்ற திறமையை வெளிப்படுத்தி, இன்னும் பல பெண்கள், விளையாட்டை நோக்கி வருவதற்கான Role Model-ஆக இருக்கும் தங்கை கார்த்திகாவை நாம் பாராட்டினோம். அவரது வெற்றிப்பயணம் தொடர என்றும் துணை நிற்போம், என்று கூறி உள்ளார்.
கார்த்திகாவிற்கு குறைவாக தொகை
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் எழுப்பி உள்ள கேள்வியில், கேள்விக்குள்ளாகும் சமூக நீதி.. குகேஷ் விளையாண்டது Individual game. ஆதலால் அவருக்கு 5 கோடி. மேலும் அது world championship போட்டி. ஆனால் கண்ணகி நகர் கார்த்திகா விளையாடியது Individual game அல்ல. அது குழு விளையாட்டு. மேலும் கண்ணகி நகர் கார்த்திகா விளையாண்டது Asian Tournament game. எனவே அவருக்கு 25 லட்சம் கொடுத்தது தான் சரி" என்று திமுகவை நியாயப்படுத்துவதற்காக ஒரு கும்பல் எழுதுவதை காணமுடிகின்றது. எனவே சில உதாரணங்களை காண்போம்..
World carrom championship போட்டியில் காசிமா என்ற தங்கையும் தங்கப்பதக்கத்தை வென்றார். ஆனால் குகேஷ்க்கு 5 கோடி அறிவித்ததை போல தங்கை காசிமா அவர்களுக்கு திமுக அரசு ஊக்கத்தொகை முதலில் அறிவிக்கவில்லை. பல அழுத்தத்திற்கு பின்பாக தான் திமுக அரசு காசிமாவுக்கு ஒரு கோடி ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கியது. குகேஷ் அவர்களுக்கு என்ன Criteria'வின் அடிப்படையில் 5 கோடி வழங்கப்பட்டதோ, அதே தகுதியை தான் காசிமா அவர்களும் பெற்றிருந்தார். குகேஷ் விளையான்டது World championship போட்டி, காசிமா விளையாண்டதும் World championship போட்டி. குகேஷ் விளையான்டது Individual game. காசிமா விளையாண்டதும் Individual game. ஆனால் குகேஷ்க்கு 5 கோடி வழங்கிய திமுக அரசு, காசிமாவுக்கு வெறும் 1 கோடி மட்டுமே வழங்கியது. அது ஏன்..??
கேள்விக்குள்ளாகும் சமூக நீதி..!
— Urimai Kalam TV (@Peruvazhuthiyar) October 26, 2025
🤷♂️🤷♂️🤷♂️
"குகேஷ் விளையாண்டது Individual game. ஆதலால் அவருக்கு 5 கோடி. மேலும் அது world championship போட்டி. ஆனால் கண்ணகி நகர் கார்த்திகா விளையாடியது Individual game அல்ல. அது குழு விளையாட்டு. மேலும் கண்ணகி நகர் கார்த்திகா விளையாண்டது Asian… pic.twitter.com/wfWofP4kes
மேலும் கண்ணகி நகர் கார்த்திகா விளையாண்டது குழு விளையாட்டு. எனவேதான் அவருக்கு 25 லட்ச ரூபாய் மட்டும் திமுக அறிவித்துள்ளது என்று கூறுபவர்களுக்கும் சில உதாரணங்களை பதிவு செய்துவிடுவோம். கடந்த 2020இல் ஹரியானா மாநிலத்தில் பூஜா நார்வால் என்ற கபடி வீராங்கனைக்கு அம்மாநிலத்தினுடைய அரசு 3 கோடி ரூபாயை ஊக்க பரிசாக அறிவித்தது. இத்தனைக்கும் ஹரியானா பாஜகவால் ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கின்ற மாநிலம். ஹரியானா அரசாங்கம் மூன்று கோடி ரூபாய் வழங்கியதும் இதே குழு விளையாட்டில் விளையாடிய பூஜா நாவால் என்ற தனிநபருக்குத் தானே..! அப்போ தங்கை கண்ணகி நகர் கார்த்திகா விளையாடியது மட்டும் குழு விளையாட்டு என்று எவ்வாறு இவர்கள் தட்டி கழிக்கின்றார்கள்..?
சனாதன சிந்தனை கொண்ட ஹரியானா பாஜகவே மூன்று கோடி ரூபாய் வழங்குகின்ற பொழுது, கண்ணகி நகர் கார்த்திகா அவர்களுக்கு திமுக அதைவிட கூடுதலாகவே நிதி அறிவித்திருக்க வேண்டாமா.? ஆனால் திமுக வெறும் 25 லட்சம் மட்டுமே கண்ணகி நகர் கார்த்திகா அவர்களுக்கு அறிவித்து, திமுகவின் சமூக நீதி சிந்தனையை மக்களிடத்திலே தற்பொழுது கேள்விக்கு உள்ளாகியுள்ளது, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதேபோல் இன்னும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குகேஷுக்கு ரூ. 5 கோடி கொடுக்கப்பட்ட நிலையில் கார்த்திகாவிற்கு ஏன் அதே தொகை கொடுக்கப்படவில்லை என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
அரசு தரப்பு விளக்கம்
இது தொடர்பாக தமிழக அரசு வட்டார தகவல்கள் விளக்கங்களை அளித்துள்ளன. அதில், தமிழ்நாடு அரசின் கொள்கைப்படி, உலக அளவில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வேறுபடும். உதா: உலக செஸ் சாம்பியன் - 5 கோடி ரூ; உலகக் கோப்பை அணி உறுப்பினர் (கிரிக்கெட்/கோ கோ) - 25 லட்சம் ரூ.
ஆசிய அளவில் (ஆசிய விளையாட்டுகள்): தங்கம் - 50 லட்சம், வெள்ளி - 30 லட்சம், வெண்கலம் - 20 லட்சம் (2023 அடிப்படை). கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்/பரிசு வெல்பவர்கள், போலவே ஆசிய அளவில், தேசிய அளவில், மாநில அளவில் வெல்பவர்கள் என்று முறையே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ. 3 கோடி என்றும், உலக சாம்பியன்ஷிப் (4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது) போட்டியில் வென்றால் ரூ. 1 கோடி என்றும் நிறைய பிரிவுகள் இருக்கின்றன.
குகேஷ் வென்றது செஸ் உலக சாம்பியன்ஷிப் (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது) - அவருக்கு அரசாணையின் அடிப்படையில் ரூ. 75 லட்சம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ரூ. 5 கோடி அளிக்கப்பட்டது, பரிசுத் தொகையாக! குகேஷ் தான் உலகின் இளம் செஸ் சாம்பியன்! 17 வயதில் வென்றிருந்தார். இதுவும் ஒரு முக்கியமான காரணம் அவ்வளவு பெரிய பரிசுத் தொகைக்கு!
குகேஷுக்கு ரூ. 5 கோடி ஆனால் கார்த்திகாவுக்கு வெறும் ரூ.25 லட்சமா?
— DMK Updates - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@DMK_Updates) October 26, 2025
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், உலக அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்/பரிசு வெல்பவர்கள், போலவே ஆசிய அளவில், தேசிய அளவில், மாநில அளவில் வெல்பவர்கள் என்று முறையே ஊக்கத்தொகை… pic.twitter.com/Tc9BRT7VLT
தற்போது கார்த்திகாவுக்கு வருவோம்!
கார்த்திகா பங்குபெற்றது Asian Youth Games! (நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது). இதற்கு தமிழ்நாடு அரசாணையின் படி தங்கம் வென்றால் ரூ. 15 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். தற்போது கார்த்திகாவிற்கு ரூ. 25 இலட்சம் அளிக்கப்பட்டிருக்கிறது. கார்த்திகாவுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அடுத்தகட்ட பயிற்சிகளுக்கு உதவும், அவரை இந்திய சீனியர் கபடி அணிக்காக விளையாட தேவையானவற்றைச் செய்யும். இந்த இரண்டு வீரர்களும் அவரவர் துறைகளில் பல வெற்றிகளைக் குவிக்கவிருக்கின்றனர். வெவ்வேறு பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்கத்தொகையை ஒப்பிடுவதே தவறு.
இது தொடர்பாக அரசாணைகளும் உள்ளன. அதன் அடிப்படையிலேயே பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதில் பிரிவினை, வேறுபாடு எதுவும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications