சிங்கிளாக போராடிய கமல்.. வெற்றிக் கோடு வரை வந்து.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "டாக்டர்"...!
சென்னை: கோவையில் ஒற்றை ஆளாக போராடி வரும் கமல்ஹாசன் வாக்கு வேட்டை நடத்த உறுதுணையாக இருந்தவர் டாக்டர் மகேந்திரன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் மகேந்திரன். இவர் மருத்துவராவார். கோயமுத்தூர்காரர்.
கறைப்படியாத கைகளுக்கு சொந்தக்காரர். கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் நிர்வாகிகள் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ அதற்கு சரியானவர் மகேந்திரன்.

மநீம
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வாங்கும் போதே தேர்தலுக்கு ஆகும் செலவை வேட்பாளரே பார்த்துக் கொள்ள வேண்டும். கட்சி சார்பில் பணம் கொடுக்கப்படாது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் அறிவித்தார்.

சம்பாதித்தல்
அது போல் தன்னுடன் வருபவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

பின்னடைவு
அங்கு இவரை எதிர்த்து திமுக சார்பில் காங்கிரஸின் மயூரா ஜெயக்குமாரும், அதிமுக சார்பில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனும் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன் பின்னடைவை சந்தித்தார்.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமாரும், வானதியும் மாறி மாறி முன்னிலை வகித்தார்கள். இதையடுத்து கமல்ஹாசன் அந்த இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை வகித்த நிலையில் மறுபடியும் இழுபறி நீடிக்கிறது. புதிதாக கட்சி தொடங்கினாலும் கமல்ஹாசன் இரு பெரும் கட்சிகளுக்கு டஃப் பைட் கொடுத்து வருகிறார்.

பிழைப்பு
இவரது வெற்றிக்கு காரணம் கமல்ஹாசனின் சினிமா புகழ், அவரது கள ஆய்வு ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு முக்கிய நபரும் காரணமாகிறார். அவர்தான் மகேந்திரன். இவருக்கு கோவையில் செல்வாக்கு அதிகம். கோவையில் இவரை நம்பி 1000 முதல் 1500 குடும்பங்கள் வரை பிழைப்பு நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

காரணம்
மேலும் இவர் ஒரு தொழிலதிபர். இவருக்கு நற்பெயர் இருக்கிறது. எனவே கமல்ஹாசனின் இந்த கடும் போராட்டத்திற்கு மகேந்திரனும் முக்கிய காரணமாவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர் கைகாட்டும் நபருக்கு வாக்களிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications