சாட்டை துரைமுருகன் டூ இடும்பாவனம் கார்த்தி! நூல் பிடித்து வந்த என்ஐஏ! நாம் தமிழர் ரெய்டுக்கு காரணம்?
சென்னை: இன்று அதிகாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் டாப் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ தீவிர ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இன்று அதிகாலை திருச்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் இருந்துதான் அப்படியே நூல் பிடித்து என்ஐஏ மற்ற நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை செய்தது.

என்ன நடந்தது?: சாட்டை வீட்டை தொடர்ந்து அங்கு கிடைத்த ஆவணங்கள், போன் பேச்சுக்கள் வழியாக இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோரிடம் என்ஐஏ விசாரணை செய்தது. அவர்களின் வீடுகளிலும் ரெய்டு செய்தது.,
அங்கே கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த மதிவாணன், கோவையில் முருகன் மற்றும்நாதக முன்னாள் நிர்வாகி ரஞ்சித் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையில் இருந்து இங்கே அதிகாரிகள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு செய்து வருகிறது.
30 நிமிட கேப்பில் அடுத்தடுத்த ரெய்டுகள் நடக்கின்றன. பொதுவாக என்ஐஏ என்பது தேசிய விவகாரத்தில் மட்டுமே ரெய்டு செய்யும். அதாவது தீவிரவாதம், வெளிநாட்டில் இருந்து பணம் பெறுதல், மணி லாண்டரி, கிளர்ச்சி இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பது, பாகிஸ்தான், சீனாவுடன் தொடர்பில் இருப்பது, நாட்டிற்கு எதிராக சதி திட்டம் போடுவது, நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பது, உள்நாட்டு அமைதியை குலைக்க விரும்புவது போன்ற காரணங்களால் என்ஐஏ ரெய்டுகளை நடத்தும்.
ரெய்டு: அந்த வகையில் இன்று அதிகாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் டாப் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ தீவிர ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த புகாரின் காரணமாக சோதனை என தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக சில அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பிய நிதி காரணமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குவிந்த புள்ளிகள்: நாம் தமிழர் கட்சி பொதுவாக வெளிநாட்டு நிதியை அதிகம் பெறக்கூடிய கட்சி. வெளிநாட்டில் அந்த கட்சிக்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளனர். முக்கியமாக வெளிநாட்டு தமிழர்கள் பலர் இவர்களுக்கு நிதி கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதி தொடர்பாக என்ஐஏ விசாரணை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி உள்ளது.
வெளிநாட்டு நிதி தொடர்பாகவே விளக்கம் கேட்டு நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பி உள்ளதாம். இன்னொரு பக்கம் கோவை மாவட்டத்தில் இரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்/ ஆலந்துறை ஆர் ஜி நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியின் ரஞ்சித் என்பவரது வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சீமானை சந்திக்க கட்சி நிர்வாகிகள் அவரின் வீட்டில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications