என்கவுன்ட்டரால் உயிர் பயத்தில் வழக்கறிஞர் அருள்? திருவேங்கடத்தை சுட்டு கொன்றது ஏன்? பகீர் பின்னணி?
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய மூளையாக செயல்பட்ட திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பரபரப்பான அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 11 பேரில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாக தெரியவந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக திருவேங்கடத்தை புழல் சிறையில் இருந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் மாதவரத்தில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸார் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீஸார் துரத்திய போது அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவலர்களை சுட முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் இரு முறை சுட்டுள்ளனர். இதையடுத்து அவரது இடது பக்க நெஞ்சு பகுதியிலும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருவேங்கடம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
ரவுடி திருவேங்கடத்தின் மீது 2015 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உள்பட 3 கொலை வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டர் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த ரவுடி திருவேங்கடம்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய மூளையாக செயல்பட்டார் என்பது குறித்து நேற்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவருகிறது. அந்த காட்சியில் ஆம்ஸ்ட்ராங்கை முதலில் திருவேங்கடம்தான் வெட்டுகிறார். அதிலும் ஆம்ஸ்ட்ராங் உயிர் பிழைக்காத மாதிரி ரத்தம் வெளியேறும் நரம்புகளிலேயே திருவேங்கடம் வெட்டியுள்ளார்.
இந்த நிலையில் திருவேங்கடத்தின் என்கவுன்ட்டர் குறித்த பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது ஏன் என்பது குறித்த காரணங்களும் யார் யார் உதவினார்கள் என்ற தகவல்களும் வழக்கறிஞர் அருளுக்கும் திருவேங்கடத்திற்கும்தான் தெரியும் என போலீஸார் கருதுகிறார்கள். அதாவது அருளுக்கு திருவேங்கடம் நெருக்கமானவர் என தெரிகிறது.
விசாரணையில் கொலை தொடர்பாக அருளும் திருவேங்கடமும் ஒரே மாதிரியான விஷயங்களை விசாரணையில் தெரிவித்தனராம். 3 நாட்கள் காவலில் எடுத்து அவர்களை தனித்தனியே விசாரித்தும் அருளும் திருவேங்கடமும் உண்மைக் காரணத்தை மறைக்கிறார்கள் என போலீஸார் கருதுகிறார்கள்.
திருவேங்கடம்தான், ஆம்ஸ்ட்ராங்கை பின்னால் இருந்து தாக்கி முதலில் காலில் அரிவாளால் வெட்டியவர். திருவேங்கடம் வெட்டிய பிறகு அதில் ஆம்ஸ்ட்ராங் நிலைத்தடுமாறியதும் தான் அவரை மற்ற கொலையாளிகள் சுற்றி வளைத்து வெட்டத் தொடங்கினர்.
அருளிடம் இருந்து உண்மையை வெளிக் கொண்டு வரவே திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் வழக்கறிஞர் அருள் உயிர் பயத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுவிட்டதால் அருள் , கொலை செய்தது ஏன் என்பதை சொல்லியிருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
வழக்கறிஞர் அருள், ரவுடி திருவேங்கடம் ஆகியோரிடம் கடந்த ஒரு மாதமாக அதிக பணம் புழங்கியுள்ளதாக தெரிகிறது. ரவுடி திருவேங்கடம் மூலம் கூலிப்படையை அருள் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதெல்லாம் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்த கருத்துகளே! அதிகாரப்பூர்வமானவை அல்ல!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications