அதிர வைத்த ரிங் ஆப் ஃபயர்! ஜப்பானில் நிலநடுக்கம்! அதை தொடர்ந்து சுனாமி! அடிக்கடி இப்படி நடப்பது ஏன்?
சென்னை: ஜப்பானில் புத்தாண்டு தினத்தில் சுனாமி ஏற்பட்டு உள்ளது. இங்கே சுனாமி ஏற்படுவதற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.
ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வர தொடங்கி உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது.

ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேத விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை..
ஜப்பான் நிலநடுக்கம் புதுப்பிப்புகள்: இன்று காலை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு மத்திய ஜப்பானைத் தாக்கியது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்குப் பகுதிகளில் தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கங்களை பதிவு செய்ததாக அறிக்கையில் கூறி உள்ளது. இதையடுத்து வடக்கு மற்றும் மத்திய கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு வெளியிட்டது.
ஜப்பான் பூகம்பம்: ஜப்பானில் கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வர தொடங்கி உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து கடல் நீர் அலை அலையாக புக தொடங்கியுள்ளது. இதுவரை நடந்தது என்ன?
ஜப்பான் வானிலை மையம் 5 மீட்டர் (16.5 அடி) உயரத்திற்கு தண்ணீர் வரக்கூடும் என்று எச்சரித்து உள்ளது. உயரமான நிலத்திற்கு அல்லது அருகிலுள்ள கட்டிடத்தின் உச்சிக்கு தப்பிச் செல்லுமாறு மக்களை அறிவுறுத்தி உள்ளது..
இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகரின் கடற்கரையை 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அலைகள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் நேரப்படி மாலை 4:10 மணியளவில் (இந்திய நேரப்படி பிற்பகல் 12.30) இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து,"அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக உயரமான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நிலநடுக்கம்; ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் உயரக்கூடும் என தென் கொரியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்சாய் எலெக்ட்ரிக் பவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதன் அணுமின் நிலையங்களில் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அங்கு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று அறிவித்துள்ளது.. மேற்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அனைத்து அதிவேக ரயில்களும் இஷிகாவா மாகாணத்தில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.
ரிங் ஆப் ஃபயர்: பசிபிக் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி ஏற்படுவது வழக்கம். இங்கு செசிமிக் செயல்பாடு அதிகம் இருப்பதால் எளிதாக நிலநடுக்கம் ஏற்படும். இதன் காரணமாக அடிக்கடி ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இது வடக்கு ஜப்பான் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 மார்ச் 11ம் தேதி அங்கு இந்த பேரழிவு ஏற்பட்டது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. அதை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டது. இப்போது 13 வருடங்கள் கழித்து மீண்டும் மார்ச் மாதத்தில் அதே புகுஷிமா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புகுஷிமாவில் சுனாமி அலைகள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது .. இதன் காரணமாக 40.5 மீட்டர் உயரம் வரை அங்கு அலைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வடக்கு Honshu பகுதிதான் இந்த சுனாமி காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். தற்போது இதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications