சென்னை சாலைகளில் திடீரென தோன்றிய முதலை.. பின்னணியில் ஷாக்கிங் காரணம்.. என்னங்க சொல்றீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சாலைகளில் திடீரென நேற்று இரவு முதலை ஒன்று தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எப்படி சாலையில் தோன்றியது என்பது தொடர்பான விளக்கம் வெளியாகி உள்ளது.

சென்னை மழை காரணமாக ஏரிகளில் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8,409 கன அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு 4,242 கன அடியாக இருந்த நீர்வரத்து, இரவு முழுவதும் பெய்த கன மழையால் 8,409 கன அடியாக அதிகரித்துள்ளது.

What is the reason behind the Crocodile in Chennai Perungalathur amid the Cyclone Michaung

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.15 அடியாக உள்ளது (மொத்தம் 24 அடி). ஏரியில் இருந்து வினாடிக்கு 3,009 கன அடிக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் உபரி நீர் வெளியேற்றத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 4 மணி வரை 12.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சுரங்க பாதைகள் மூடல்: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இதுவரை 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக 15 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

முதலைகள் திடீரென வந்தது எப்படி: சென்னையில் மழை, புயலுக்கு நடுவே, பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றுள்ளது. மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த முதலை அருகே இருக்கும் ஏரி பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதலை வர என்ன காரணம்?: இது தொடர்பாக வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சென்னையில் உள்ள பல நீர் ஆதாரங்களில் முதலைகள் ஏற்கனவே உள்ளன. புயல் மழை காரணமாக தண்ணீர் அதிகரித்துள்ளதால் ஒரு முதலை வெளியே வந்துள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று சென்னை பெருங்களத்தூர் ஏரி அருகே முதலை சாலையில் தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அது மீண்டும் சாலைக்குள் வர வாய்ப்பு இல்லை. தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் முதலை வெளியே வந்துள்ளது. அது மீண்டும் வெளியே வர வாய்ப்பு இல்லை.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. முதலைகளின் பாத்திகளை, செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம், என்று முதலை சாலையில் தென்பட்ட சம்பவத்தில் வனத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 8 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+