செங்கோட்டையனுக்கு பின்னணியில் அவரா? எடப்பாடியை எதிர்க்க இதுதான் காரணம்! ராஜகம்பீரன் சொன்ன சீக்ரெட்
சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதற்கு பின் என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் தெரிவித்து உள்ளார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.

உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
விளக்கம்: அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதற்கு பின் என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் தெரிவித்து உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், செங்கோட்டையன் ஏற்கனவே முதல்வர் ரேஸில் இருந்தார். எடப்பாடி - செங்கோட்டையன் இருவரும் ஒரே சமூகம், ஒரே ஏரியா. அப்படி இருக்க அந்த சமூகத்தில் யார் பெரிய பதவியில் இருக்கிறாரோ அவர் பின்னால்தான் அந்த சாதியினர் இருப்பார்கள். செங்கோட்டையனுக்கு முதல்வர் வாய்ப்பு வந்த போது கூவத்தூர் பார்முலா தனக்கு செட் ஆகாது என்பதால் அவர் முதல்வராகவில்லை. அவர் தவிர்க்கப்பட்டால் தவிர்த்துக்கொண்டார்.
இப்போது இத்தனை காலம் புகைந்து கொண்டு இருந்த விஷயம் தற்போது நெருப்பாக வெளியே வந்துள்ளது. இப்போது கோகுல இந்திரா தொடங்கி பலர் வெளியே எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே எம்ஜிஆர் படங்கள் பல முறை பயன்படுத்தப்படவில்லை. அப்போதெல்லாம் செங்கோட்டையன் அதை பற்றி பேசவில்லை. இப்போது பேசுகிறார் என்றால் எம்ஜிஆர் அதற்கு காரணம் இல்லை.
இதன் அர்த்தம் எடப்பாடி மீது எதிர்ப்பை செங்கோட்டையன் பதிவு செய்ய உள்ளார். இன்னொரு தேர்தலில் எடப்பாடி தரப்பு தோற்றால் செங்கோட்டையன் கடுமையான புரட்சிகளை செய்வார். தலைமை பண்பு இல்லாமல் எடப்பாடி கட்சியை பிடித்துவிட்டார் என்று செங்கோட்டையன் நினைப்பதாக கருதுகிறேன். அதிமுகவின் எதிர்க்கலாம் பாதிக்கப்படும் என்பதால் செங்கோட்டையன் இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போது புதிய கட்சிகள் வருவதால் இளைஞர்கள் அந்த கட்சிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் அதிமுகவின் எதிர்க்கலாம் பாதிக்கப்படும். இதனால் பல விஷயங்களை நினைத்து செங்கோட்டையன் இப்படி பேசி இருக்கலாம். இவருக்கு பின் பாஜக இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் இவருக்கு பின் மணியான ஒருவர் இருக்கலாம். அவரின் குரலாக இவர் இருக்கலாம். எடப்பாடி தலைமை மீது இவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
எடப்பாடி வலிமையாக இல்லை. அவர் எந்த வலிமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற கோபம் இவர்களுக்கு உள்ளது. அதிமுகவில் எதிர்க்கட்சி பேசுபவர்களை அழைத்து எடப்பாடி பேச வேண்டும். வேண்டுமென்றால் இவர்களை வைத்து ஒரு தேர்தல் குழுவை எடப்பாடி உருவாக்கலாம். அப்படித்தான் செய்வார். வேறு ஒருவர் வெளியே செல்வதை எடப்பாடி விரும்ப மாட்டார். கட்சியின் பிளவாக மாற வாய்ப்பு குறைவு. எடப்பாடி - செங்கோட்டையன் சேர்ந்து பேட்டி கொடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதனால் பிளவு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications