சென்னையில் திடீரென அப்படியே நிறுத்தப்பட்ட மாநகர பேருந்துகள்.. என்ன காரணம்! வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகரில் மாநகர பேருந்து சுமார் 1.5 மணி நேரம் திடீரென நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்தும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற எந்த மாநிலத்தையும் விடப் பேருந்து போக்குவரத்து உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலத்தில் முதன்மையானது தமிழ்நாடு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பேருந்து மூலமே எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் என்ற நிலைதான் இருக்கிறது. மேலும், அரசு பேருந்துகளில் மகளிர், பள்ளி மாணவர்களுக்கு இலவச பாஸ் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

What is the reason for Chennai sudden bus protest

இதற்கிடையே இன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் திடீரென சென்னை மற்றும் புறநகரில் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். வெகு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமமடைந்தனர். குறைவான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கி போராட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

பூந்தமல்லி, ஆவடி, அரசு பேருந்துகளில் இயக்கப்படவில்லை.. தாம்பரத்தில் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டது. கேகே நகர், கோயம்பேடு, சைதாப்பேட்டை, ஆலந்தூரிலும் பேருந்து சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே பேருந்து ஓட்டுநர்களின் இந்தத் திடீர் போராட்டத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

What is the reason for Chennai sudden bus protest

அதாவது போக்குவரத்துத் துறையில் 500 ஓட்டுநர்கள் தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள் பேருந்து கழகம் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் இயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் தனியார் மூலம் நிரப்பி பயிற்சி அளிக்கும் நடவடிக்கை சென்னை உள்ளிட்ட சில பணிமனைகளில் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதைக் கண்டித்தே பேருந்து ஓட்டுநர்கள் திடீரென தன்னிச்சையாகப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.. பேருந்து ஓட்டுநர்கள் தன்னிச்சையாகப் போராட்டத்தைத் தொடங்கியதாக தொமுச நடராஜன் தெரிவித்துள்ளார். வும் இருப்பினும், இதற்கு தொமுச பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

What is the reason for Chennai sudden bus protest

எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கப்படும் என்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னரே பேருந்துகள் மெல்ல மீண்டும் இயங்க தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 1.5 மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், அதன் பின்னர் மெல்ல பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், 1.5 மணி நேரம் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பல இடங்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+