ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து.. ஓரிரு நாட்களில் மாறி மாறி ஸ்டேட்மெண்ட்! உண்மையில் என்ன தான் நடந்தது
சென்னை: ஆர்த்தி உடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாகப் பிரபல நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் அறிவித்தார். இதற்கிடையே ஆர்த்தி தனக்குத் தெரியாமலேயே இது நடந்துவிட்டதாகக் கூறி பகீர் கிளப்பியிருக்கிறார். இந்தச் சூழலில் இருவரது பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து சில ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் ஆர்த்தி என்ற பெண்ணை கடந்த 2009இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இதற்கிடையே தனது திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக ஜெயம் ரவி நேற்று முன்தினம் அறிவித்தார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இந்த தம்பதியின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
விவாகரத்து: விவாகரத்திற்கான காரணத்தை ஜெயம் ரவி எங்கும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், இது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்த்தியின் தாய் மற்றும் அவரது சகோதரருடன் ஏற்பட்ட சில பிரச்சினைகளே விவாகரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் மற்றும் அவரது வளர்ப்பு மகன் ஷங்கர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே விவாகரத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஷங்கர் மற்றும் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் ஜெயம் ரவி படம் ஒன்றில் நடிக்க இருந்ததாகவும் அப்போது ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
"ஆர்த்தி என் குயின்!" வெட்கப்பட்ட ஜெயம் ரவி.. கடைசியாக சொன்ன காதலர் தின வாழ்த்து என்ன தெரியுமா
என்ன காரணம்: அதாவது ஜெயம் ரவி தனது அடுத்த படத்தில் இயக்குநர் பாண்டிராஜ் உடன் பணியாற்ற இருந்தார். இந்த படத்திற்கு ₹25 கோடி கேட்டுள்ளார். ஆனால், இவ்வளவு அதிக பட்ஜெட்டில் படத்தை எடுக்க முடியாது என சுஜாதா விஜயகுமார் மறுத்தாக தெரிகிறது. குறிப்பாக ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மார்கெட் இல்லை எனச் சொல்லி மறுத்ததாக தெரிகிறது.
இதனால் பட்ஜெட்டை குறைக்கச் சொல்லி சுஜாதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே ஒரு கட்டத்தில் படத்தில் இருந்தே விலகுவதாக இயக்குநர் பாண்டிராஜ் சொல்லிவிட்டார். இதுவே மோதலுக்கு முதற் காரணம் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பல்வேறு காரணங்கள் சேரவே அது விவாகரத்தில் சென்று முடிந்துள்ளது. பிரபல டிவி சீரியல் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் பல்வேறு டிவி தொடர்களை தயாரித்துள்ளார். இது தவிரத் தனது மருமகன் ஜெயம் ரவி வைத்து சைரன் மற்றும் பூமி ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
ஆர்த்தி பரபர: ஜெயம் ரவி தனது அறிவிப்பில் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே இன்று ஆர்த்தி வெளியிட்ட அறிவிப்பில் தனக்குத் தெரியாமல் இது நடந்ததாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக வாழ்ந்த வாழ்க்கை ஜெயம் ரவியின் அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம் கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கணவரிடம் மனம் விட்டு பேசத் தனது கணவரைச் சந்திக்க வேண்டும் என்று சமீபகாலமாகப் பலவித முயற்சிகள் செய்ததாகக் குறிப்பிட்ட ஆர்த்தி, ஆனால் அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தானும் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications