'யார் கொடுத்த யோசனை'.. ஓபிஎஸ்சின் நிலைக்கு என்ன காரணம்?
சென்னை: நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்று அன்று கொடுத்த யோசனையை எம்ஜிஆர் நிராகரித்தார். ஆனால் இந்த யோசனையை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டு போராடி வருகிறார்.
ஆனால் அவருக்கு இதில் பெரிய சறுக்கல் தான் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை எம்ஜிஆர் போல் மக்கள் மன்றத்திற்கு உடனே போய் இருந்தால் ஏதாவது மாற்றம் நடந்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்தது ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. கர்நாடகாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும், அவர்களை அதிமுகவாக அங்கீகரிக்ககூடாது என்றும் முறையிட்ட, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு இதுவரை சாதகமாக தீர்ப்புகள் வரவில்லை. உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எதிலும் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்புகள் வரவில்லை. தன்னை எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் வாதிட்ட போது, தனது சகோதரரையே,ஓபிஎஸ் அப்படித்தான் நீக்கினார் என்று வாதிட்டு அந்த வாதத்திற்கு செக் வைத்தது எடப்பாடி பழனிசாமி. இதேபோல் சசிகலாவை நீக்கிய போது என்ன நடந்ததோ, அதேபோல் தான் ஓபிஎஸ்க்கு நடந்துள்ளது.
இந்த பிரச்சனையை ஓ பன்னீர்செல்வம் வேறுமாதிரி அணுகி இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதாவது பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் தன்னை நிராகரிக்கிறார்கள் என்ற போது உடனே மக்கள் மன்றத்திற்கு போகாமல் நீதிமன்றம் போனது தான் ஓபிஎஸ் செய்த பெரிய தவறு என்கிறார்கள்.
1972 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கிய பிறகு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது எம்ஜிஆரிடம் சிலர் நாம் போட்டி பொதுக்குழுவை கூட்டி தீர்மானம் போடுவோம். நீதிமன்றத்துக்குச் செல்வோம்' என சிலர்ஆலோசனை கூறியருக்கிறார்கள். ஆனால் அப்படியொரு முடிவை எம்.ஜி.ஆர் எடுக்கவில்லை. உடனே அ.தி.மு.கவை தொடங்கினார். கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் அதாவது 1973 ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நான்கு இடைத்தேர்தல்களில் வென்றார். 1977ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார்.
எம்ஜிஆர் மட்டுமல்ல, இந்திராகாந்திக்கும் நடந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து 1969 ஆம் ஆண்டு இந்திரா காந்தியை நீக்கினர். அவரும் தேர்தல் மூலமாக நிரூபித்துவிட்டுத்தான் காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவாக மாறினார். 1989களில் ஜெயலலிதா கூட மக்கள் மன்றத்தில் நீருபித்து தான் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
எனவே எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட உடன், உடனடியாக ஆதரவு வட்டத்தை அதிகரித்து, தனது தலைமையில் பலப்படுத்தி, இடைத்தேர்தல்களில் நின்று வென்று ஜெயித்து மக்கள் மன்றத்தில் நிரூபித்து இருந்தால், கட்சி அவர் பக்கம் வந்திருக்கும் ஆனால் ஓபிஎஸ் அப்படி செய்யவில்லை.
மாறாக நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து வழக்குக்கு மேல் வழக்கை போட்டார். ஆனால் இதில் எந்த பயனும் கிடைக்கவில்லை காரணம் சட்டத்தின் நான்கு முனைகளுக்குள்தான் நீதிமன்றங்கள் செயல்பட முடியும் என்பதால் ஓபிஸ்க்கு சாதகமாக இதுவரை எதுவும் நடக்கவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
-
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக












Click it and Unblock the Notifications