விடுமுறை வேண்டுமா? விடுதலை வேண்டுமா? திங்கட்கிழமையில் மெகா மாநாடு.. தவெக நண்பாஸ் சொல்லும் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்த பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கும் என்கின்ற தமிழக வெற்றி கழகத்தினர். இந்த நிலையில் திங்கட்கிழமை மாநாட்டை நடத்த வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து விவரித்து இருக்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்..

தொடர்ந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடிகரும் தமிழக வெற்றிக்காக தலைவர் ஆன விஜய் சம்பந்தப்பட்ட செய்திகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

tvk manadu tamilaga vetri kazhagam actor vijay

ஒருபுறம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது. இதை அடுத்து அவரது ரசிகர்கள் படத்தை வரவேற்க உற்சாகத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்

இது ஒருபுறம் இருக்க அவரது அரசியல் வருகையும் செப்டம்பர் மாதம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல இருக்கிறது. செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகின்றனர்.

மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 2 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் ஆட்களை திரட்டி வர ஏற்பாடுகள் நடக்கிறது. நிலைமை இப்படி இருக்க விஜய் கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம் தான்..

கட்சியின் கொடி வெளியிட்ட போதே பல்வேறு சிக்கல்கள் வந்தது. கொடி தொடர்பாகவே தேர்தல் ஆணையத்திலும் தற்போது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மாநாடு மட்டும் சும்மா நடத்தி விட முடியுமா?ஆரம்பத்தில் இருந்தே அவர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்திருக்கிறார். திருச்சி, சேலம்,ஈரோடு, மதுரை என பல ஊர்களை கடந்து தற்போது விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

திருச்சி, மதுரை என்றால் கூட ஏற்கனவே பல அரசியல் கட்சிகளின் மாநாடுகள் அங்கு நடந்திருக்கிறது. ஆனால் விக்கிரவாண்டி இடத்தை தவிர வேறு எந்த சிறப்பும் இல்லை என்பதால் அவர் ஆதரவாளர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அங்கும் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் அந்த இடம் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத பகுதியா? விபத்துகள் ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதா? பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா? என ஆய்வு நடத்தி அனுமதி அளிப்பார்கள் என கூறப்பட்டது.

ஆனால் தாங்கள் அனுமதிக்க மாட்டோம்.. பரிந்துரை மட்டுமே வழங்குவோம்.. மாவட்ட நிர்வாகமே அனுமதி அளிக்கும் என்கின்றனர் காவல்துறையினர். செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் என கூறப்பட்டிருக்கும் நிலையில் இடையில் வெறும் 20 நாட்களே இருக்கிறது. இதனால் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் நாள மாநாடு எந்தவித சிக்கலும் இல்லாமல் நடந்தேறுமா என்பதை கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் மாநாடு நடத்த ஆரம்பத்திலிருந்து சிக்கல்கள் வருவதாக கூறுகின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர்.

இது ஒருபுறம் இருக்க திங்கட்கிழமை மாநாடு ஏன் நடத்தப்படுகிறது என கேட்டபோது அதில் பெரிய விஷயம் எல்லாம் இல்லை.. சென்டிமெண்டாக எந்த விஷயமும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடத்தினால் கூட்டம் அதிகம் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் தலைவர் விஜய்யோ விடுமுறைக்காக கூட்டம் வருமா அல்லது அரசியல் விடுதலைக்காக கூட்டம் வருமா? என்பதை பார்க்க வேண்டும் என்றால் வார நாளில் கூட்டம் நடத்தினால் தான் நன்றாக இருக்கும் என்றாராம்.. இதனாலேயே திங்கட்கிழமை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+