தட்கலில் ஒருவாட்டி கூட டிக்கெட் எடுக்க முடியவில்லையா.. இந்த இரண்டு விஷயம் தான் மேட்டரே!
சென்னை: ரயிலில் தட்கல் டிக்கெட் புக்கிங் என்பது பலருக்கும் ஒருவாட்டி கூட சாத்தியம் இல்லாமல் இருக்கிறது.. என்னென்னவோ சொல்றாங்க சார்.. எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துட்டேன்.. ஆனால் டிக்கெட் தான் கிடைத்த பாடில்லை என்று புலம்பாதவர்களே இல்லை. ஐஆர்சிடிசி வெப்சைட்டில் தட்கல் டிக்கெட் பெற என்ன தான் வழி என்பவர்கள் இதை பாருங்கள்.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு என்பது கிட்டதட்ட 3 மாதம் முன்பே செய்தால் தான் சாத்தியம் என்கிற நிலை தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதி மக்கள் சென்னை செல்லவும், தங்கள் சொந்த ஊர் செல்லவும் ரயிலில் 3மாதம் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் ரயிலில் பயணிப்பதை மறந்துவிட வேண்டியதுதான் என்கிற நிலை இருக்கிறது.

தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்துவிடலாம் என்று நினைத்த பலருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை.. இதன் சூட்சமம் தெரியாமல் பலரும் பரிதவித்து போயிருக்கிறார்கள். சென்னையில் இருந்து வார இறுதியில் சொந்த ஊர் செல்ல டிக்கெட் எடுத்தால் நீ வீரன்டா என்று பாராட்டும் அளவிற்கு இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து ஞாயிறு அன்றுதட்கலில் சென்னைக்கு டிக்கெட் புக்கிங் செய்து திரும்பினால் அது வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. கடைசி பாலில் தோனி சிக்சர் அடித்து ஜெயிக்க வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்ற பரபரப்பும், மகிழ்ச்சியும் தட்கலில் டிக்கெட் கன்பார்ம் ஆகும் போது இருக்கும்.
பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை காலங்கள், வார இறுதி நாட்கள், ஆகஸ்ட் 15, ஜனவரி 26, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் மற்றும் சுபமூகூர்த்த தினங்களை ஒட்டிய நாட்களில் சென்னைக்கோ அல்லது சொந்த ஊருக்கோ செல்வது அவ்வளவு எளிதல்ல..இந்த நாட்களில் தட்கலில் புக்கிங் செய்ய முயற்சி செய்து வெற்றி பெற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமது நாட்டை பொறுத்தவரை சாமானியர்களுக்கான ரயில்களும், அவர்களுக்கான ஸ்லீப்பர் கோச்களுமே அதிகம் தேவை. துரதிஷ்டவசமாக அவர்களுக்கு போதிய அளவில் ரயில்களோ அல்லது ரயில்களில் ஸ்லீப்பர் கோச்களோ இல்லை. 100 பேர் தான் புக்கிங் செய்ய முடியும் என்கிற நிலையில், லட்சம் பேர் வரை முட்டும் நிலையில் பல சமயம் ஏற்படுகிறது. அதனால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
எத்தனை முறை முயற்சி செய்தாலும் சிலரால் ரயிலில் தட்கல் டிக்கெட் எடுக்கவே முடியவில்லை என்பார்கள்... அவர்களுக்கு ஒருசில விஷயங்களை நாம் பகிர்வோம். இதை சரியாக செய்தால் 50 சதவீதம் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. தட்கலில் டிக்கெட் எடுக்க 100 சதவீதம் வாய்ப்பு நிச்சயம் கிடையாது. அதேநேரம் சில தவறுகளை செய்யாமலும், சில நுணுக்கள் மூலம் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன? தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய போகிறீர்கள் என்றால், அதிவேக இணைதள இணைப்புடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பில் முயற்சி செய்ய வேண்டும். அதுதான் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்..
அதேநேரம் தட்கலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பு இரண்டு விஷயங்களை சரியாக செய்துவிடுங்கள். அது என்ன வென்றால், யார் யார் பயணிக்க போகிறீர்களோ, அவர்களின் பெயரை 10 மணிக்கு முன்பாகவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் லாக் இன் செய்து add master list இல் சேர்த்துவிடுங்கள். மாஸ்டர் லிஸ்டை பொறுத்தவரை அனைவரது ஆதார் எண்ணும் இருக்க வேண்டும். ஆதார் எண்ணை வைத்து சேமியுங்கள். அதேபோல் மாஸ்டர் லிஸ்டில் பெயர்களை சேர்க்கும் போது ஒருவருக்குமேல் லோயர் பர்த் போட வேண்டாம். இதை எல்லாம் சரியாக செய்து வைத்துக் கொண்டால், தட்கல் நேரத்தில் தேவையற்ற சிக்கல் வராது.
அதேபோல் ஐஆர்சிடிசி வாலட் பேமெண்ட் மோடில் டிக்கெட்டுக்கான பணத்தை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் சிக்கல் இல்லாமல் பேமெண்ட் போக ஒத்துழைக்கும். மற்ற பேமெண்ட் மோடுகள் சில நேரங்களில் சட்டென சிக்கலை உருவாக்கும்.. எனவே டிக்கெட் கட்டணத்தை ஐஆர்சிடிசியின் பிரத்யேக வாலட் பேமெண்ட் மோடில் காலையிலேயே போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்வேர்டு, ஐடி எல்லாம் சரியாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
சரி, தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரமான 11 மணியின் போது என்ன செய்யலாம்... தட்கல் முன்பதிவு ஏசி பெட்டிகளுக்கு 10 மணிக்கே ஓபன் ஆகிவிடும். ஏசிபெட்டிகளில் பயணிக்க 10மணிக்கும், ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 11மணிக்கும் முன்பதிவு செய்ய வேண்டும். காலை 11 மணிக்கு ஓபன் செய்ய போகிறீர்கள் என்றால், காலை 10.58க்கு லாக் இன் செய்து உள்ளே சென்றுவிடுங்கள். உள்ளே போய் எந்த பதற்றமோ, தவறுகளோ இல்லாமல் சரியாக செய்யுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய ஊர், கிளம்பும் ஊரை சரியாக கிளிக் செய்து, நாள் நேரத்தை கிளிக் செய்து. எந்த ரயிலோ அதற்கு பக்கத்தில் 11 மணிக்குள் கண்டிப்பாக போய்விடுங்கள் .
சரியாக 11 மணி ஆன உடன் அந்த ரயிலினை கிளிக் செய் உள்ளே செல்லுங்கள். போன உடன், ஏற்கனவே நீங்கள் கிரியேட் செய்த மாஸ்டர் லிஸ்டில் உள்ள பெயர்கள் அப்படிய வந்துவிடும்.நீங்கள் ஒரு பெயரின் முதல் லெட்டரைஅடித்தாலே அவர் பெயரை காட்டும். அப்படியே செலக்ட் செய்தால் வயது பர்த் என எல்லாமே வரும்.. இப்படியே குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தால் அவர்களின் பெயரை அடித்து செலக்ட் செய்து வைத்துவிடுங்கள்.
அதன்பிறகு புக்கிங் கன்பார்ம் என்றால் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்யட்டும் என்ற மோடை கிளிக் செய்யுங்கள். பின்னர் கீழே வந்தால் கேப்சியா கேட்கும். அதனை பதற்றம் இல்லாமல் அடித்தால், உள்ளே பேமெண்ட் மோடுக்கு போகும். பேமெண்ட் மோடில் ஐஆர்சிடிசி வாலட் ஆப்சனை செலெக்ட் செய்தால் சட்டென் உள்ளே போய் எந்த சிக்கலும் இல்லாமல் பேமெண்ட் கிளிக் ஆகிவிடும். எளிதாக முன்பதிவு செய்யலாம்.
ஐஆர்சிடிசி வாலட்டிற்கு அடுத்தபடியாக பேடிஎம் பயன்படுத்துங்கள் . பேமெண்ட் ஆப்சனில் எரர் இல்லை என்றால், எளிதாக பேடிஎம் இல் உள்ள போய் ஸ்கேன் பே ஆப்சனை செலெக்ட் செய்து, உங்கள் மொபைலை வைத்து பேடிஎம் மூலம் ஸ்கேன் செய்தால் டிக்கெட் உடனே புக் ஆகிவிடும். ஆனால் முக்கியமான நாட்களில் எந்த பேமெண்ட் மோடும் சரியாக ஓர்க் ஆகாமல் போக வாய்ப்பு உண்டு. மொத்தமாக ஐஆர்சிடிசி தளமே முடங்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஐஆர்சிடிசி வாலட்டில் முயற்சித்தால் டிக்கெட் புக்கிங் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் சில நிமிடங்களே இருக்கும் என்பதால் கவனமாக செய்யுங்கள்.ஒருமுறை கிளிக் செய்தால் மறுபடியும் மறுபடியும் கிளிக் செய்வதோ, ரிப்ரஸ் செய்வேதா எந்த காரணம் கொண்டும் செய்துவிட வேண்டாம். ஒரு சில வினாடிகள் சுற்றும்.. இறுதியாக வந்துவிடும். நீங்கள் ஒருமுறை தவறு செய்தால் கூட புக்கிங் பண்ண முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. சிறு தவறு கூட செய்யாமல் சரியான முறையில் பதற்றம் இல்லாமல் டெக்ஸ்டாப் அல்லது லேப்டாப்பில் அதிவேக இணையத்துடன் முயற்சித்தால் டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எரர் எதுவும் டெக்னிக்கலாக தோன்றாத பட்சத்தில், புக்கிங் ஆக உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications